பக்கம்:பல்சுவை விருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பல்சுவை விருந்து

இதில் மேடு பள்ளம் நிறைந்த காட்டில் வேங்கையின் இயக்கத்தைக் காணலாம்.

கீச்சென்று கத்தி - அணில் கிளையொன்றில் ஓடிப் - பின் வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை வெடுக்கென்று தான்க டிக்கும்

ஆச்சென்று சொல்லி - ஆண் அணைக்க நெருங்கும் - உடன் பாய்ச்சிய அம்பென கீழ்த்தரை நோக்கிப் பறந்திடும் பெட்டை அணில்:

மூச்சுடன் ஆணோ - அதன் முதுகிற் குதிக்கும் - கொல்லர் காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக் கலந்திடும் இன்பத்திலே.” அணிலின் ஆணும் பெண்ணும் அங்கும் இங்கும் ஒடி இறுதியில் இன்பக் கலவியில் ஆழங்கால் படுவதில் இயக்க நிலைப் படிமங்கள் நம்மை மகிழ்வூட்டுகின்றன. நள்ளிரவின் அமைதியிலே மணிவி ளக்கும் நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல் மெல்லஉடல் குளிரும்வகை வீசா நிற்கும் வீணைஇல்லை காதினிலே இனிமை சேர்க்கும்.' இப்பகுதியில் தென்னாடு பெற்ற செல்வத் தென்றலின் இயக்கம் தெள்ளிதின் புலனாகின்றது. இயக்க படிமத்தால் நம் உடலும் தடவப் பெறுவது போன்ற உணர்ச்சியால் பூரிக்கின்றோம். அன்னையின் அன்பினைக் கண்ணிற் காணாமல் அவளின் செயலில் காண்பதுபோல உருவம் காணப் பெறாத தென்றலின் ஒவ்வொரு சின்ன நல் அசைவிலும் நம்மைச் சிலிர்த்திடச் செய்யும் செயல்களைக் கண்டு பரவசப்படுகின்றோம்.

33. டிெ மக்கள் நிலை அணில், 34. குடும்ப விளக்கு ஒருநாள் நிகழ்ச்சி.