பக்கம்:பல்சுவை விருந்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 47

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்

அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்

செல்வம்ஒன்று வரும்; அதன்பேர் தென்றற் காற்று." இப்பாடற் பகுதியில் நாற்றப் புலப் படிமம், தொடு புலப் படிமம், இயக்கப் புலப் படிமம், செவிப் புலப் படிமம், சுவைப் புலப் படிமம் ஆகியவை அமைந்துள்ள நேர்த்தி எண்ணி எண்ணி மகிழத் தக்கது. கவிதையை ஓர் அழகிய அணங்காகக் கற்பனை செய்யும் பாடல்களில் இது ஒன்று.

தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ

விண்ணிலம் கார்குழலோ காணும் எழிலெல்லாம்

மெல்லியின்வாய்க் கள்வெறியோ அல்லிமலர்த் தேனின் வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ

வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை! கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோவந்து விட்டாள்

கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!" இதில் கட்புலப் படிமம், தொடுபுலப் படிமம், நாற்றப் புலப் படிமம், சுவைப் புலப் படிமம், செவிப்புலப் படிமம் ஆகிய ஐந்து வகைப் படிமங்களும் கலந்த நிலையை அநுபவித்து மகிழலாம்.

மெய்யுற வாய்சு வைக்க

விழிஅழ குண்ண மூக்கு வெய்யசந் தனத்தோள் மோப்ப

விளைதமிழ் காது கேட்க ஐயன்பால் புலன்கள் ஐந்தால்

அழிந்தள்ள வேண்டும்!"

44. பாதா.க. இரண்டாம் தொகுதி. தென்றல்

45. பாரதிதாசன் கவிதைகள் - 14 எழுதாக் கவிதை, 46. குடும்ப விளக்கு முதியோர் காதல்