பக்கம்:பல்சுவை விருந்து.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பல்சுவை விருந்து

இப்பாடற் பகுதியும் ஐந்துவகை படிமங்களையும் கொண் டிலங்குகின்றது.

மின் வெட்டுப் போன்ற மணிமொழிப் படிமங்கள்: மேற் கண்ட படிமங்களைத் தவிர பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும், சொற்றொடர்களிலும் மின்வெட்டுகள் போன்ற பல்வேறு படிமங்கள் பாங்குற அமைந்திருப்பதையும் கண்டு மகிழலாம். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவோம். செப்புச் சிலை போல் நிற்றல் (குப்பன்), வாடாத பூ முடித்த வஞ்சி (வள்ளி), நெஞ்சம் மூலிகை இரண்டின் மேல் மொய்த் திருத்தல், மூலிகையில் ஆசை மோதிடுதல், அச்சுப்பதுமை (வள்ளி). கிட்டரிய காதற் கிழத்தி இடும் வேலை விட்டெறிந்த கல்லைப் போல் மேலேறிப் போதல், தேன் சுரக்கப் பேசுதல், சாக்குருவி வேதாந்தம், கனிமுத்தம், கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல் தரையில் வைப்பதைப் போல், ஆளிவாய்ப் பாகவதன், வெல்லத் தமிழ் நாடு, தென்றலில் மெல்லச் சிலிர்க்கும் (சிரிக்கும்) முல்லை, கன்னல் தமிழ், வானத்தை வெண்ணிலா வந்து தழுவுதல், பாளைச் சிரிப்பு. ஆணிப்பொன் மேனி, அன்னத்தைத் (அமுதவல்லி) துக்கி ஆரத் தழுவுதல், அழகு வெளிச்சம், நவமணிக் களஞ்சியம், இருட் கதவை உடைத்தெறிந்தான் பரிதி, தணல் அள்ளும் பெருவெளி, அமுதப்பண், குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள், கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள், அணையாத காதல், சதிராடு தேவடியாள் போல், பாதச் சிலம்பு பாடிற்று, இதழ் நிலத்தில் கனஉதட்டை ஊன்றி விதைத்தான் முத்தம், துயரில் அழுந்திக் கரையேறி, கள்ளியும் பாளை போல் கண்ணீர் விட்டு, மாவின் வடுப்போன்ற விழி, தென்னாட்டு அன்னம் (பெண்), வாழ்க்கை மலர் சொரிகின்ற இன்பத்தேன், கனி இதழ் நெடி துறிஞ்சி, கனியிதழைக் காதல் மருந்தென்று தின்றான், தேனைச் சொட்டுகின்ற இதழாள், மலை நிகர் மார்பில் அலை நிகர் கண்ணிர் அருவிபோல் இழிந்தது. என்னுளம் அவனுளம் இரண்டும் பின்னின, நானும் அவனும் தேனும் சுவையும்