பக்கம்:பல்சுவை விருந்து.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் பாடல்களில் படிமங்கள் 49

ஆனோம், காலை மலரக் கவிதை மலர்ந்தது, தையற் சடுகுடு பொறி, தணல் நிற மாம்பழத்தில் தமிழ் நிகர் சுவையைக் கண்டான், உள்ளத்தில் கவிதை வைத்தே உயிரினால் எழுப்பி னாள், கிளிப் பேச்சுக் கிளி, பண்டிதர்கள் பழங்கதையின் ஒட்டைக்கெல்லாம் பணிக்கை இடல் போல், மணி விளக்கும் நடுங்காமல் சன்னலுக்குள் புகுந்த தென்றல், பலாப்பழம் போல் வயிறு, வீறார்ப்பு வாழ்வு, மாணிக்க மாம்பழந்தான் மாகதத்தின் இலைக் காம்பில் ஊசலாட, கற்பாரின் நிலையேயன்றிக் கற்பிப்பார் நிலையும் உற்றாள், விரிவாழைப் பூவின் கொப்பூழ், கன்னற் பிழிவே கனிச்சாறே கண்ணுறங்கு, சேவல் கூவிற்று வானம் சிரித்தது. இந்தச் சொற்றொடர்களில் பொதிந்திருக்கும் பல்வேறு வகை படிமங்கள் படிப்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன.

கவிதை அநுபவம்: நம் உடல் தூண்டல் - துலங்கல் என்ற உளவியல் தத்துவப்படி இயங்குகிறது. உள்ளமும் அதற்கேற்பத் துலங்குகிறது. வெளி உலகிலிருந்து தூண்டல்கள் புலன்களைத் தாக்கும்போது அவற்றிற்கேற்பப் புலன்கள் துலங்குகின்றன. அதாவது, அப்புலன்கள் அத்துண்டல்களால் கிளர்ச்சியடை கின்றன. அதனால் ஏற்படும் உணர்ச்சியை மனம் அநுபவிக் கின்றது. இந்த உணர்ச்சிப் பெருக்கில் உண்டாகும் இன்பமே முருகுணர்ச்சியே - சுவையாகும். எடுத்துக்காட்டாக மணப் பொருள்கள் தரும் மணத்தை நாற்றப் புல நரம்புகள் வாங்கி மூளைக்கு அனுப்புகின்றன. மனம் அப்பொருள்கள் நல்கும் மணத்தை அநுபவிக்கின்றது. எடுத்துக்காட்டு ஊதுவத்தியின் மணம். இப்படியே பிற புலன்களின் மூலம் பெறும் துண்டல் களால் மனம் அந்தந்தப் பொருள்கள் தரும் சுவைகளைப் பெற்று அவற்றில் ஈடுபடுகின்றது. இவ்வாறு வெளியுலகத் துண்டல் களால் அடிக்கடி மனம் பெறும் அநுபவம் பெரு மூளையில் பதிவாகி விடுகிறது. உலகை இன்ப மயமாகக் கண்டு உள்ளத்தில் பூரிப்பு அடைபவர்கள் கவிஞர்கள். அதற்கு உள்ளத்தில் கனிவு வேண்டும்.