பக்கம்:பல்சுவை விருந்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

き。

4. விண்வெளிப் பயணம்’

நீலவான் முகட்டை மூட்டித்

தாக்கிடு வோமே - இந்த

நீண்ட வெளி தன்னைச் சுற்றிக்

கொள்ளை கொள்வோமே.

என்பது மனிதன் காணும் துணிகரமான கனவாகும். இது மானிடயியல் வரலாற்றிலேயே நடைபெற்ற மிகப் பெரிய துணிகரமான நனவுமாகும். இது திங்கள், கோள்கள், விண்மீன்கள் இவற்றைப் பற்றி ஆராய்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பாகவும் அமைகின்றது. அறிவியல் துறையில் மின்சார ஊழி, அணு ஊழி என்றெல்லாம் வழங்கப் பெறுவதை நாம் அறிவோம். இனி விண்வெளி ஊழி என்பதையும் சேர்த்துக் கொள்ளும் காலமும் வந்துவிட்டது. இன்று மனிதன் விண்வெளி யினைத் துருவி ஆராயத் தொடங்கி விட்டான், அதனை ஆட் கொள்ளவும் துணிந்து விட்டான். விண்வெளிச் செலவுத்துறை இவ்வளவு விரைவாக வளர்ச்சி பெறும் என்று எந்த அறிவிய லாரும் சிந்தித்திருக்க முடியாது.

விண்வெளி உலகுகள்: விண்வெளியைப் பற்றி மணிவாசகப் பெருமான் வியந்து கூறியதை,

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பருங் காட்சி

ஒன்றனுக் கொன்ா தின்றெழில் பகரின்

நூற்றொடு கோடியின் மேற்பட விரிந்தன.'

என்ற கவிதைப் பகுதியில் காணலாம். தேசியகவி பாரதியாரும்,

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பனாரின் மணிவிழா மலரில் (1992) வெளி வந்தது. 1. திருவா: திருவண்டப் பகுதி (1-4)