பக்கம்:பல்சுவை விருந்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பல்சுவை விருந்து

நக்கபிரான் அருளால் - இங்கு நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்; தொக்கன அண்டங்கள் - வளர் தொகைபல கோடிகள் கோடிகளாம்!" என்று கூறுவார். இந்த விண்வெளியினைக் கரையற்ற கடல் என்று உருவகித்துக் கூறிய கவிஞர் பெருமான்,

இக்கடல் அதனகத்தே - அங்கங் கிடையிடைத் தோன்றும்புன் குமிழிகள் போல் தொக்கன உலகங்கள் - திசைத் துவெளி அதனிடை விரைந்தோடும்; மிக்கதோர் வியப்புடைத்தாம் - இந்த வியன்பெரு வையத்தின் காட்சி கண்டீர்.” என்று எண்ணற்ற அண்டங்கள் வானவெளியில் மிதந்தோடு வதை வியந்து பாராட்டி மகிழ்வர். இந்த உலகங்களுக் கிடையேயுள்ள தூரங்களைக் கற்பனையாலும் காண முடியாது! சக்தியை வியந்து பாராட்டும் கவிஞர் பாரதியார்,

அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,

அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை, மண்ட லத்தை அணுவணு வாக்கினால்

வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை" என்று இந்தத் துரத்தைக் கற்பனையில் கணக்கிட்டு மகிழ்வார்.

ஒவ்வொரு விண்மீன் மண்டலமும் ஒவ்வோர் அகில மாகும். ஒவ்வொரு விண்மீன் குடும்பத்திலும் ஆயிரமாயிர இலட்ச விண்மீன்கள் அடங்கியுள்ளன. அவற்றிற்கிடையேயுள்ள துரங்கள் மிகப் பெரியவை. இந்த எல்லையற்ற விண்வெளியில்

2. பா.கா: கோமதி மகிமை - 5 3. ബി. - 7 4. டிெ மகாசக்தி வாழ்த்து - 1