பக்கம்:பல்சுவை விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 53

நமது கதிரவன் ஒரு சாதாரண விண்மீனாகும். அஃது இந்த எண்ணற்ற விண்மீன் குடும்பங்கள் உள்ள வெளிப்பரப்பில் ஒரு துரத்தில் மிதந்து கொண்டுள்ளது. எல்லா விதத்திலும் அஃது ஒரு சராசரி விண்மீன்தான். நம் கதிரவனை விடக் குறுக்களவில் பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரிய விண்மீன்களும் உள்ளன. பன்னுற்றுக் கணக்கான மடங்கு சிறிய விண்மீன்களும் உள்ளன. எண்ணற்ற விண்மீன்களைப் போலவே நம் ஞாயிறும் விண்வெளியில் பல உலகங்கள் அடங்கிய ஒரு மாபெரும் குடும்பமாகும். அக்குடும்பம் ஞாயிற்றுக் குடும்பம் (Solar system) என்று வழங்கப் பெறும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா உலகுகளும் பிரித்தற்கியலாத நிலையில் பிணைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு விண்மீன்களுக்கிடையே உள்ள தூரங்க ளுடன் ஒப்பிட்டால் ஞாயிற்றுக் குடும்பத்தைச் சேர்ந்த உலகுகள் மிக அண்மையிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.

ஞாயிற்றுக் குடும்பம்: ஞாயிற்றுக் குடும்பத்தில் உள்ள உலகுகள் யாவும் கோள்களே (Planets). இந்தக் கோள்களுள் ஒன்று நாம் வாழும் பூமி. எனவே, இந்த அகிலத்தின் மையமாக இருப்பது ஒன்பது கோள்களுள் ஒன்றானதும் சாதாரண கோளும் ஆன பூமி அன்று ஞாயிற்றுக் குடும்பத்தில் கதிர வனுக்கு மிக அண்மையிலிருப்பது புதன்; இக்கோள் ஏனைய எல்லாவற்றிலும் மிகச் சிறியது. அடுத்து, கதிரவனுக்கு அப்பால் நகர்ந்து கொண்டே செல்வோமாயின் வெள்ளி. நாம் வாழும் பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் (நிருதி), நெப்டியூன் (வருணன்), புளுட்டோ (குபேரன்) என்ற வரிசையில் இக் கோள்கள் அமைந்துள்ளன என்பதை அறியலாம். செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் சுமார் ஐம்பதினாயிரம் கோள்கள் அடங்கிய சிறு கோளத் திரள்கள் (Asteroids) சுற்றி வருகின்றன. இவை யாவும் கதிரவனைச் சுற்றி வலம் வருகின்றன.

துணைக் கோள்கள்: இந்தக் கோள்கள் பலவற்றிற்கு ஒன்றும் பலவுமான துணைக்கோள் உள்ளன. பூமியின் துணைக் கோள் சந்திரன். இது பூமியைச் சுற்றி வலம் வந்து