பக்கம்:பல்சுவை விருந்து.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 57

தக்க பாதுகாப்பின்றி எந்த ஆராய்ச்சியாளரும் இப்பகுதியில் நிலவும் கதிரவனின் ஆற்றல் மிக்க புற-ஊதாக் கதிர்கள் உயிருக்கே உலை வைக்கும் விண்கற்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. இங்குதான்.காற்றிலுள்ள அணுக்களும் மூலக் கூறுகளும் கதிரவனிடமிருந்து வரும் மின் காந்த அலைகளினால் (Electro-magnetic waves) GuorgaserG) uðairg Tr# garcoup எய்தி அயனிகளாகின்றன. வானொலி அலைகளில் திருப்பம் ஏற்படுவதும் இப்பகுதியில்தான். விண்வெளியில் இந்த மின்சார ஆடி (Electrical mirror) மட்டிலும் இராவிடில் வானொலிச் செய்திகளை நெடும் தொலைவிடங்கட்கு அனுப்ப இயலாது. இரேடார் சாதனத்தின் குறுகிய குற்றலைகளும் (Ultra-short waves) தொலைக்காட்சி அலைகளும் இந்த அடுக்கினை ஊடுருவிச் செல்கின்றன.

ஐந்தாவது: அயனி மண்டலத்திற்கு மேலுள்ள பகுதியைப் புறவளி மண்டலம் (Exosphere) என்று வழங்குகின்றனர். இப் பகுதியில் காற்றின் மூலக்கூறுகள் இங்கொன்றும் அங்கொன்று மாக இருக்கலாம். படிப்படியாக இம் மண்டலம் எல்லையற்ற விசும்பு வெளியுடன் கலக்கின்றது. இந்த விண்வெளியை வெற்றிடம் என்று கருதுகின்றனர் அறிவியலறிஞர்கள். இன்னும் இம்மண்டலத்தைப் பற்றி அதிகமாக ஒன்றும் அறியக் கூடவில்லை. அயனி மண்டலத்திற்கும் புறவழி மண்டலத்திற்கும் இடையிலுள்ள பகுதியைத் துணைக் கோள்கள் (Satellites) கடந்து செல்வதில் தடையிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

பயணத்திற்கேற்ற ஊர்தி: விண்வெளியில் பயணத்திற்கு ஏற்ற ஊர்தி இராக்கெட்டு விமானம் ஆகும். சாதாரணமாக இதற்கு மூன்றடுக்கு இராக் கெட்டைத்தான் பயன்படுத்து கின்றனர். இந்த அமைப்பில் மூன்று இராக்கெட்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக, உணவு கொண்டு செல்லும் அடுக்குகளைப் பொருத்தி வைத்திருப்பது போல், செங்குத்தாக நிறுத்தி வைக்கப் படும். செருகி வைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதியிலிருப்பது முதல் நிலை இராக்கெட்டு அதற்கு மேலிருப்பது இரண்டாவது