பக்கம்:பல்சுவை விருந்து.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\! {

அணிந்துரை (அரிமா துரை, சுந்தரராஜுலு)

'தமிழ்ச்செம்மல்", 'கலைமாமணி’, 'ஆய்வுத் தமிழரசு', 'பொதுமறைச் செம்மல், "தமிழ் வாகைச் செம்மல் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் எண்ணற்ற நூல் களை எழுதி, மக்கள் மத்தியிலே பெரும் நன் மதிப்பை பெற்றவர். ஏறத்தாழ 120 நூல்களுக்கும் மேல் எழுதிய இவர் 'பல்சுவை விருந்து' என்ற நூலினைத் தமது பட்டியலில் இணைத்துள்ளார். தனது 87 வயதிலும் தளரா உழைப்போடு இடையறாது தமிழ்ப்பணி ஆற்றிவரும் இவர், இந்த நூவின் அணிந்துரையை எழுத என்னைப் பணித்துள்ளார். நான் புத்தகங்கள் நிறைய படிப்பவன் என்றாலும், இப்படிப்பட்ட பணி எனக்குப் புதியது. முயன்று இருக்கிறேன். அண்ணா நகர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருக்கும் இந்நூலாசிரியர். அச்சங்கத்தின் செயலாளராக உள்ள என்னிடம் இப்பொறுப்பை ஒப்படைத்திருப்பது நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன். 'பல்சுவை விருந்து என்னும் இந்நூல் 13 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை, "ஒன்றே குலம் - ஒருவனே தேவன்', 'வழிகாட்டும் வள்ளுவம்'. "பாவேந்தர் பாடல் களில் படிமங்கள். விண்வெளிப்பயணம் தமிழில் நகைச்சுவை, புதுக்கவிதை - சமுதாய நோக்கில்', 'ஒவ்வாமை', 'வரலாறு எழுதுவது எப்படி', 'திருக்குறள் - வாழ்வுச் செல்வம்', 'காமராசர் பற்றிய நினைவுகள்', 'இராஜாஜி பற்றிய நினைவுகள்', 'சாதி ஒழிப்பு. வைணவச் சிகரப் பேரொளி' என்பனவாம். பல்வேறு நிலைகளில் தாம் எழுதியதும், பேசிய சொற்பொழிவுகளைத் தொகுத்து இந்த 13 கட்டுரைகளில் வடித்துத் தந்திருக்கிறார்.

செயலர், அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம், 101 எல்.பிளாக், அண்ணாநகர் கிழக்கு சென்னை - 6001.02. தொ.பேசி. 6633322