பக்கம்:பல்சுவை விருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6C பல்சுவை விருந்து

இப்பொழுது மூன்றாவது அடுக்கு இராக்கெட்டு தானியங்கு அமைப்பால் இயங்கத் தொடங்குகின்றது. அது தான் செல்லும் திசையில் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே செல்லும். இறுதியாக அது பூமியின் கிடைமட்டமான திசையில் 480 கி.மீ. உயரத்தில் செல்லுங்கால் அதன் வேகம் மணிக்கு 28,000 கி.மீ. ஆகி விடுகின்றது. இந்நிலையில் அதிலுள்ள தானியங்கி அமைப்பு இயங்கி அதன் பிடியிலுள்ள துணைக் கோளை - விண்கலத்தை - விடுவிக்கின்றது. இங்ஙனம் விண்கலத்தின் வேகம் அதிகரிக்க எல்லா வழிகளும் மேற்கொள்ளப் பெறுகின்றன.

பூமியைச் சுற்றி வரும் துணைகோள் (விண்கலம்) வட்டப் பாதையில் சுற்றி வர வேண்டுமாயின் அதன் வேகம் அதன் உயரத்திற்கேற்ற சுற்றுவழி வேகமாக (Orbital uelocity) அமைதல் வேண்டும். மற்றும் அது பூமிக்குக் கிடைமட்டமான திசையிலும் வீசப் பெறுதல் வேண்டும். இந்த இரண்டு கூறுகளில் ஒரு சிறிது மாற்றம் ஏற்பட்டாலும் விண்கலம் நீள் வட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கும். அகப்பற்றையும் புறப்பற்றையும் நீக்கிய ஆன்மா வீட்டுலகைத்தை நோக்கி விரைவது போல் மூன்றடுக்கு இராக்கெட்டுக் கவசங்களையும் மூக்குப் பகுதிகளையும் நீக்கிய விண்கலம் விண்வெளியில் தான் அடைய வேண்டிய இலக்கை நோக்கி விரைந்து செல்லுகின்றது. விண்வெளிப் பேரிடர்கள்: இராக்கெட்டு விமானத்தில் விண்வெளியில் செல்வோருக்குத் தாம் புறப்பட்டது முதல் விண் வெளியில் செல்லும் வரையிலும் அதன் பிறகு அவர்கள் இந்நில உலகிற்குத் திரும்பும் வரையிலும் பல பேரிடர்கள் நேரிடலாம்.

இடர்கள்: விண்கலத்தினுள் இருப்பவர்கட்குக் கடுங்குளிர், அழுத்தமின்மை, வாயுவில்லாத சிரமம், அண்டக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், விண் கற்கள் போன்ற இடையூறுகளைத் தவிர்த் தாக வேண்டும். தவிரவும், அந்த வெற்றிடச் சூழ்நிலையில், அந்த ஏகாந்த மெளனப் பெருவெளியில் மனிதனது குருதி கொதிக்கத் தொடங்கி அவன் உயிர் துறக்கவும் நேரிடும். இதனால் பூமியில் அவன் வாழும் சூழ்நிலையே அவன்