பக்கம்:பல்சுவை விருந்து.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் 63

எடையின்மை: இராக்கெட்டின் பிடியிலிருந்து விடுபட்டு விண்கலம் பூமிக்குக் கிடைமட்டமாக வட்டச் சுற்று வழியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அதனுள் இருக்கும் பொருள் கட்கு எடை என்பதே இராது. சில இயற்பியலின் ஆற்றலுக்கு உட்படுவதன் விளைவாக இந்த நிறையின்மை ஏற்படுகின்றது. பூமியின் ஈர்ப்பு ஆற்றல் தன் மையத்தை நோக்கி இராக் கெட்டினை இழுக்கின்றது. ஆனால் விண்வெளியில் செல்லும் இராக்கெட்டு பூமியின் மையத்தினின்றும் மேலே நோக்கிச் செல்லுகின்றது. இராக்கெட்டு விமானம் அதிவேகமான மைய விலகு விசையுடன் செல்லுகின்றது. இவ்வாறு எதிர்த் திசையில் இழுக்கும் ஆற்றலுக்கு உட்பட்டு மையம் விலக்கு விசை அதிகரித்ததும் பூமியின் ஈர்ப்பு ஆற்றலுக்குச் சமமானதும் விண்கலத்திற்கும் அதனுள் இருப்பவர்கட்கும் எடையில்லா உணர்ச்சி ஏற்படுகின்றது. இதன் விளைவாக யாவும் அந்தரத்தில் தொங்குகின்றன. இவை மேல் நோக்கியும் போவதில்லை. கீழ் நோக்கியும் இறங்குவதில்லை. நம் வான்மதி விநாடிக்கு 102.4, கி.மீ. வீதம் சுழன்று கொண்டு அந்தரத்தில் தொங்குவதை இதற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நிறையற்ற நிலை ஏற்படுங்கால் விண்வெளிக் கலத்தினுள் சில விசித்திர நிகழ்ச்கள் நடைபெறுகின்றன. கலத்தினுள்ள சேர்த்துக் கட்டப் பெறாத பொருள்கள் யாவும் அதனுள்ளேயே பறந்து கொண்டிருக்கும். இதனால் தான் கலத்தினுள்ளிருக்கும் விமானி திருகாணிகளால் பொருத்தப் பெற்றிருக்கும் இருக்கை யுடன் சேர்த்துக் கட்டப் பெற்றிருப்பார். இல்லை எனில் அவர் இருக்கையுடன் கலத்தினுள் பறக்க வேண்டிய நிலை ஏற்படும்! எடையின்மையால் உயிருக்கு எவ்வித தீங்கும் இல்லை. குருதி யோட்டம் சிறிதும் பாதிக்கப் பெறுவதில்லை. இதயம் நன்றாகச் செயற்படுகிறது. சுவாசித்தல் இயல்பாக நடைபெறுகின்றது. செரிவின் ஆற்றலுக்கும் இடையூறு ஒன்றும் இல்லை. உடலி லுள்ள ஏனைய உறுப்புகளும் சரியாகவே இயங்குகின்றன. ஆனால் விமானி செயற்படுதலில் தடை ஏற்படும். இச்