பக்கம்:பல்சுவை விருந்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒本 பல்சுவை விருந்து

சூழ்நிலையில் சரியாகச் செயற்படுவதற்கும் பயிற்சி தரப் பெறுதல் வேண்டும்.

உணவு முறை சாதாரணமாக இப்பூமியில் மேற்கொள்ளும் பயணத்திலேயே நமது உணவு முறை பெரிய அளவில் மாறுபடு கின்றது. எடையற்ற புதிய சூழ்நிலையில் எத்தனையோ மாறு பாடுகள் இருக்கும். குவளையிலுள்ள நீரை அண்ணாந்து பருக முடியாது. குவளையினின்றும் நீர் கீழே விழாது. உறிஞ்சிதான் நீரினைப் பருகுதல் வேண்டும். பானங்கள் நீண்ட குழாய்க ளுடன் பொருத்தப்பெற்றிருக்கும். பாலித்தீன் புட்டிகளில் வைக்கப் பெற்றிருக்கும். புட்டிகளை அழுத்திப் பீறிட்டு வெளி வரும் பானங் களைப் பருகுதல் வேண்டும். உண்ண வேண்டிய உணவும் பசை வடிவில் பல்பசை வடிவத்திலிருப்பது போன்ற குழல்களில் அடைக்கப் பெற்றிருக்கும். அக்குழல்களை வாயில் திணித்துக் கொண்டு அமுக்கிப் பசை வடிவிலுள்ள உணவை உண்ண வேண்டும். நாக்காழ்வாரும் வயிற்றாழ்வாரும் இவ்வகை உணவினை ஏற்றுச் செயற்படுவதில் பயிற்சி பெறுதல் வேண்டும். இன்னொரு விசித்திர நிகழ்ச்சியினையும் உணரலாம். வயிற்றுக்குள் சென்ற பிறகும் உணவு வயிற்றின் அடிப் பகுதியை அடையாமல் மிதந்து கொண்டிருக்கும். ஆயினும் உணவு செரி மானம் ஆவதில் யாதொரு இடையூறும் ஏற்படுவதில்லை. நல்ல வேளையாக எடையற்ற நிலையில் உடலின் உள்ளுறுப்புகள் எவ்விதத் தீங்குமின்றி நன்றாகவே இயங்குகின்றன.

சுவாசிக்கும் முறை: விண்வெளியில் சுவாசிப்பதற்கு உயிரியம் இன்றியமையாததாகின்றது. இப்புவியில் நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவிகிதம் உயிரியமும், 78 சதவிகிதம் நைட்ரஜனும், ஒரு சதவிகிதம் ஆர்கான் என்ற வாயுவும் உள்ளன. விண் வெளியிலிருக்கும்போது இந்த விகிதம் வாயுக்கள் கலப்ப தில்லை. தேவையான அளவு காற்றழுத்தம் இருக்கும் வரையில் நைட்ரஜன் நம் குருதியில் எளிதாகக் கலந்து விடுகின்றது. அழுத்தம் குறையுங்கால் அது குருதியில் கலக்காமல் குமிழிக ளாகத் தோற்றமளிக்கின்றன. இதனால் ஒருவருக்கு உயிரிழப்பும்