பக்கம்:பல்சுவை விருந்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பல்சுவை விருந்து

"சுவை' என்ற கருத்தை வேறொரு விதமாகவும் விளக்க முயல்வேன். இதனால் இஃது ஒரு புதிய கருத்தன்று என்பது தெளியப்படும். வண்ணப் படத்தில் வரையப் பெற்ற பன்றி யொன்று சேற்றில் மூழ்கி வெளியேறிய தோற்றத்தை அப்படியே ஒவியர் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதனைப் பார்க்கும் நாம் அதனையே பன்முறை உற்று நோக்கி ஒருவித இன்பத்தை அடைகின்றோம் அல்லவா? ஆயினும், பன்றி அன்று சேற்றில் புரண்டு எழுந்து சேறும் அழுக்குமாக நம் எதிரில் தோன்றினால் நாம் அக்காட்சியைக் கண்டு அடைகின் றோமா? இல்லையன்றோ? சில சமயம் அக்காட்சியைக் காணச் சகியாமல் அருவருப்புடன் முகத்தைக் கூட வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ளுகின்றோம். அதுவும் சேற்று நாற்றமும் சேர்ந்து வீசத் தொடங்கினால் சொல்ல வேண்டியதில்லை. இதிலிருந்து பெறப்படுவது என்ன? கலை நமக்கு ஊட்டுவது ஒர் இன்ப உணர்ச்சியின் விளைவு என்பதை நாம் அறிகின்றோம். இதையே இலக்கண நூலார் சுவை' (ரஸம்) என்று பெயரிட் டுள்ளனர். சுவையை ஒன்பது வகையாகப் பிரித்தும் காட்டி புள்ளனர். இந்த ஒன்பதிலும் அவர்கள் எல்லாவித உணர்ச்சி விளைவுகளையுமே அடக்கியிருப்பதுதான் வியப்பினும் வியப்பேயாகும். நம்மவர்கட்கு இதில் சிறிதேனும் சிரமம் இல்லை. ஏனெனில், இசையினை, ஏழேசுரத்தின் சேர்க்கையாக உணர்த்திய அதிசயத்தை வேறு எந்த நாட்டில் காண முடியும்?

சுவை பற்றிய வடநூலார் கொள்கை: சுவைபற்றிய வட நூலார் கொள்கையை அறிந்து கொள்ளுதல் சாலப் பயன்தரும். முதலில் சுவைகளின் இயல்பினையும் அவை உண்டாகும் முறையினையும் நோக்குவோம். மக்கள் உள்ளத்தில் ஒவ்வொரு கால் எழும் உள வேறுபாடு பாவம் எனப்படும். பாவங்களுள் சில நிலை பெற்றிருக்கும்: பல சிறிது நேரம் நின்று மறையும். தனககு ஒற்றுமையுடையனவும், வேற்றுமையுடையனவுமான