பக்கம்:பல்சுவை விருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் நகைச்சுவை 了复

கண் நோக்குதல் முதலிய செய்கைகள் இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. காதல் முதலிய ஸ்தாயி பாவங்களைத் துணைக் காரணமாய் நின்று வளர்க்கின்ற பிரிவு, நினைவு, விரைவு முதலியன சஞ்சாரி பாவம் எனப்படும். இதனை வியபிசாரி பாவம் என்று கூறுதலும் உண்டு. இஃது அரசனைப் பின் தொடரும் ஏவலர் போலவும், கடலில் பிறக்கும் அலை போலவும், ஸ்தாயி பாவங்களைப் புலப்படுத்தி நிற்கும். தொல்காப்பியர் கூறும் புதுமுகம் புரிதல்" முதலியனவும் கூழை விரித்தல்” முதலியனவும் அநுபாவம் எனற வகையினுள் அடங்கும்.

இதனை எடுத்துக்காட்டு ஒன்றால் விளக்குவேன். துஷ்யந்த னுக்குச் சகுந்தலையும் சகுந்தலைக்குத் துஷ்யந்தனும் காதலுக்கு ஆலம்பனம். இந்தக் காதல், தென்றல், நிலா, சோலை முதலிய உத்தீபன விபாவங்களால் எழுப்பப்படுகின்றன. கண்ணிர் வார்தல், கடைக்கண் நோக்குதல் முதலிய காரியங்களால் (அநுபாவங்களால்) அநுபவப்படுகின்றன. பின்னர் விரைவு, நினைவு முதலிய சஞ்சாரி பாவங்களால் வளர்க்கப் பெற்று மனத்தில் நிலை பெறுகின்றன.

இவ்வாறு தோன்றி, தெளிவாகி, வளர்ந்து வருகின்ற காதல் முதலாகிய பாவங்கட்கு நல்லறிஞர் உள்ளத்தில் உண்டாகும் பிரதி பிம்பமே ரஸம் எனப்படும் என்று கொள்ள வேண்டும். தூய வெண்ணிறத்தவாகிய ஞாயிற்றின் கதிர்கள் செந்நிறக் கண்ணாடியில் படும்போது அவற்றிற்குச் செந்நிறம் உண்டாதல் போன்று, காரணம் முதலியவற்றிற்கும் காதல் முதலியவற்றிற்கும் பிரதிபலிக்கச் செய்யும் பொருளின் தன்மையை அனுசரித்துச் சில விசேட வேறுபாடுகள் உண்டாகின்றன. அதனால் காரணம் முதலி யவை விபாவம் முதலாய நிலையில் இன்ன மனிதர், இன்ன நேரம், இன்ன இடம் இவை போன்ற சிறப்பியல்புகளை விட்டுப் பொதுவாய வடிவில் அமைகின்றன. அவ்வாறே ஸ்தாயி பாவங் களுள் சோகம், இளிவரல் முதலிய மாறுபட்ட உள வேறுபாடுகளும்

8. மெய்ப். நூற். 13 (முதல் அவத்தை); அவத்தை - நிலை. 9. டிெ - 14 (இரண்டாம் அவத்தை)