பக்கம்:பல்சுவை விருந்து.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பல்சுவை விருந்து

அதுகூல பாவங்களாக அமைகின்றன. அதனாலே கருணம் (சோகத்தால் உண்டாவது) பீபஸ்தம் (இழிவரலால் உண்டாவது) முதலிய சலங்களிலும் (சுவைகளிலும்) நமக்குச் சுவையும் ஈடுபாடும் உண்டாகின்றன. மகாகவி நீலகண்ட தீட்சிதர் "நிர்வேதம் (விரக்தி). பயம், சோகம், ஜூகுப்ஸ் (அருவருப்பு) முதலியவையும் இலக்கியங்களில் ரஸத் தன்மையன ஆகின்றன" என்று கூறியிருப்பது ஈண்டு அறியத் தக்கது.

நல்லறிவாளன் தன் தூய உள்ளத்தில் இந்த விபாவம் முதலியவைகளை மீட்டும் மீட்டும் நினைக்கும் செயலுக்குச் சுவைத்தல் (சர்வணம்) என்று பெயர். அவ்வாறு சுவைக்கும் நிலையில் கரும்பின் துண்டிலிருந்து இனிப்புச் சுவை உண்டாதல் போன்று விபாவம் முதலியவற்றிலிருந்து சிருங்காரம் முதலிய 'ரலங்கள் தோன்றுகின்றன. காதல் முதலிய உள வேறுபாடுகள் நல்லறிவாளருள்ளத்தில் ஆதிகாலம் முதலே வாஸ்னா ரூபமாய்ப்" படிந்துள்ளன. அவற்றை விபாவம் முதலியன எழுப்பி விடுகின்றன. என் போலவோ எனின், பொருள்களில் அமைந்து கிடக்கின்ற நிலையியல் மின்சாரத்தை (Static electricity) தேய்த்தல் வெளிப்படுத்துவது போல் என்று கூறலாம். இவ்விபாவம் முதலியவை ஒருங்கு சேர்ந்து உண்டான சிறப்பியல் செயலால் பூர்வ வாசனைக்கு எழுச்சி வருவதனோடு உள்ளம் இராசச, தாமச குணங்கள் அகலப் பெற்று, சுத்த சத்துவமாய்ச் சமைகின்றது. ஆன்மா அஞ்ஞானத் திரையினின்று நீங்கிச் சித்பிரகாச ஆனந்த ரூபமாய் விளங்குகின்றது. இத்தகைய சத்துவ நிலையை அடைந்த உள்ளத்திற்கு இத்தகைய ஆத்தும சாட்சியாய்ப் பொருளாகின்ற அநாதி வாஸ்னா ரூபமாகிய காதல் முதலிய பாவமே ரஸம் என அறுதியிடப் பெற்றுள்ளது.

10. மனம் தொன்று தொட்டுப் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அநுபவிக்கின்ற பொழுது மனத்தில் செதுக்கி விட்டுப் போன உணர்ச்சி மீண்டும் அப்பொருள்களைக் காண நேரிடுங்கால் தட்டி எழுப்பப் பெறுகின்றது. இங்ங்ணம் செதுக்குண்டிருக்கும் உணர்ச்சியையே அறிஞர்கள் வாஸனை என்று பெயரிட்டு வழங்குவர்.