பக்கம்:பல்சுவை விருந்து.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பல்சுவை விருந்து

துக்ககரமான நிகழ்ச்சியை ஏற்றிருப்பாராயின் அவர் வாயி னின்று கவிதை வெளிவராது என்பது ಸಣT.. கவிதை ஆனந்தக் களிப்படைந்த உள்ளத்திலே உருவெடுக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம்.

உலகியல் நிகழ்ச்சிகள் சுவையன்று. இவ்விடத்தில் ஒரு முக்கிய உண்மையை மனத்திலிருத்துதல் வேண்டும். உலகியலில் நிகழும் செயல்களால் உண்டாகும் இன்பத்தை ಉ என்று கொள்ளுதல் பொருந்தாது. காரணம் ஒரு சுவைக்குக் கூறும் இலக்கணம் எல்லாவற்றிற்கும் பொருந்துவதில்லை. உலகியற் செயல்களுள் நகை, காதல் போன்றவற்றில் இன்பம் உண்டாதல் போல் அழுகை, இளிவரல், அச்சம், வெகுளி முதலியவற்றில் இன்பம் உண்டாதல் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இதனால்தான் சுவை இலக்கண நூலார் உலகிய லின்பத்தைச் சுவை என்று கொள்ளாமல் நாடகத்திலாவது காவியத்திலாவது அச்செயல் நிகழும் பொழுது அவற்றைக் காண்டலும் கேட்டலும் செய்யும் நல்லறிவாளருள்ளத்தில் விபாவம் முதலியவற்றால் உண்டாகும் சுவையையே ரஸ்ம்' என்று அறுதியிட்டனர். உலகில் ஒரு தாய் தன் இளமகன் இறந்ததைக் குறித்து அழுதலைக் கேட்குங்கால் நமக்குத் துயரம் உண்டாகின்றது. ஆனால் மேகநாதன் இறந்துபட்டபோது இராவணன், மண்டோதரி புலம்புவதாகவுள்ள பாக்களைப் படிக்கக் கேட்குமிடத்து அளவிலா மகிழ்ச்சி உண்டாகின்றது. அவலத்திலும் இன்பத்தைக் காண்பதால்தான் அப்பாக்களைப் பன்முறை கேட்டும் படித்தும் இன்புறுகின்றோம். ஆகவே, இலக்கியத்தில் காணப்பெறும் எல்லாவித உணர்ச்சிகளும் படிப்போருக்கு இன்பம் அளிப்ப தால் அவை யாவும் சுவைகள் என வழங்கப் பெற்றன என்றும் உலகியல் நிகழ்ச்சிகளின் உணர்ச்சிகள் அங்ங்னம் இன்பம் அளிப்பதில்லை என்றும் ஈண்டு நாம் அறிதல் வேண்டும்.

இனி, நகைச்சுவையைப் பற்றி ஆராய்வோம். நகை என்பது சிரிப்பு. அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என்று மூன்று வகைப்படும்.