பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பல்லவப் பேரரசர்



பல்லவர் - தமிழரே

“பல்லவர் தமிழர் அல்லர் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒருவேளை அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவராக இருப்பினும், அவர்கள் கூடியவரை தமிழர்களாகிவிட்டார்கள் என்று அறியவேண்டும். இங்கிலாந்தில் முதலாம் ஜார்ஜ் ஜெர்மானியராக இருந்தபோதிலும் அவரது மரபு ஆங்கிலத்திற் கலந்து ஆங்கிலமாகிவிட்வில்லையா? அதுபோலவே, பல்லவரும் ஒருவேளை, வெளிநாட்டிலிருந்து புகுந்திருந்தபோதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ-வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன. உண்மையில் அம்மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமேயாகும். பல்லவர் என்னும் சொல் தமிழ் அல்லவா? இப்பொழுதும் பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லவன்’ என்று பரிகசிப்பது இல்லையா? அம்மன்னரில் முதற் புருஷனுக்குப் பல் நீண்டிருக்கலாம். அச்சொல் அம்மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக்காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல்கொண்ட மன்னன் ஒருவனுக்கு அப்பெயர் நிலைத்தது. முடத்திருமாறன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன.

மேலும், பல்லவர்கள் ‘காடவர்’ முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள். சான்றாக இன்றுள்ள ‘கார்வேட் நகர்’ என்னும் பெயரைக் காண்க. அதன் பழைய வடிவம் ‘காடு வெட்டி நகரம்’ என்பது. ‘காடவர், காடு வெட்டி’ முதலியன தமிழ்ப்பெயர்கள் அல்லவா? ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயராகும். ‘போது’ என்பது பல்லவருக்கும்