பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

பல்லவப் பேரரசர்



தான வகை

பல்லவப் பேரரசர் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பல ஊர்களை வழங்கினர். அவை ‘பிரம்ம தேசம்’ எனப் பெயர் பெற்றன. அவர்களால் கோவில்கட்கு விடப்பட்ட கிராமங்கள் ‘தேவதானச் சிற்றுார்கள்’ எனப்பட்டன. சமணர் கோவில்கட்குப் பெற்றிருந்த வரியற்ற நிலங்கள் ‘பள்ளிச் சந்தம்’ எனப் பெயர்பெற்றன. தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்து அளிக்கப்பட்ட நிலங்கள் அல்லது ஊர்கள் ‘பட்ட விருத்தி’ எனப்பட்டன.

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநாட்டில் இருந்த பெரிய அறங்கூர் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ எனப் பெயர்பெற்றன. சிற்றூர் அவையங்கள் ‘கரணம்’ எனப்பட்டன. உயர் நீதிமன்றம் ‘தர்மாஸனம்’ எனப் பெயர் பெற்றது.

பலவகை வரிகள்

பல்லவ அரசாங்கம் குடிகளிடமிருந்து பலவகை வரிகள் பெற்று வந்தது. அவற்றுள் மிகச் சிறந்தது. நிலவரி ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு கடமை வாங்கி வந்தது. தென்னை பனைமரங்களில் கள் இறக்க வரி விதிக்கப்பட்டிருந்தது. செங்கொடி, கருசராங் கண்ணி முதலிய மருந்துச் செடிகளைப் பயிராக்கப் பணம் செலுத்தி உரிமை பெறவேண்டி இருந்தது. மருக்கொழுந்து, நீலோற்பலம் (குவளை மலர்) முதலியன அரசாங்க உரிமை பெற்றே (வரி செலுத்தியே) பயிரிட வேண்டியனவாக இருந்தன. கால்நடைகளாற் பிழைப்பவர், வேட்கோவர், வண்ணார், புரோகிதர், பலவகைக் கொல்லர் தரகர், ஒடக்காரர், செக்கார், நூல்