பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பல்லவப் பேரரசர்



பஹ்லவருள் ஒருவனான வீர கூர்ச்சன் என்பவன் நாக அரசன் மகளை மணந்து நாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். அவன் மரபினரே பிற்காலப் பல்லவர். இப் பல்லவர் முற்சொன்ன் சுவிசாகன் என்ற அமைச்சனது மரபில் வந்தவ்ர் ஆகலாம். பல்லவர் - முதன்முதல் ஆண்ட பகுதி. கிருஷ்ணை ஜில்லாவின் தென்மேற்குப் பகுதி என்னலாம்.

1. பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது முதல் அவர்தம் பேரரசு வீழ்ச்சி அடையும்வரை அவர்கள் சாளுக்கியர், கதம்பர், சோழர், பாண்டியர், சேரர், களப்பிரர் முதலியவருடன் ஒயாது போரிடவேண்டியவர். ஆயினர். இப்போராட்டங்கள் பல்லவர் வெளி நாட்டார் என்பதைக் குறிக்கின்றன அல்லவா?

2. பல்லவர் முதல் அரசனான சிவஸ்கந்தவர்மன் வைத்துக்கொண்ட மஹாராஜாதிராஜன் என்ற பட்டம் தென்னாட்டிற்கே புதியதாகும். அதனை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பார்த்தியரே ஆவர்.

3. பார்த்தியர் இந்தியர் அல்லர் ஆயினும், இந்தியாவின் பல பகுதிகளில் தங்கி ஆளத்தொடங்கியது முதல் இந்திய முறைகள் எல்லாவற்றையும் கையாளத் தொடங்கினர். (1) அவர்கள் தங்கள் நாணயங்களில் கிரேக்க-வடமொழி எழுத்துகளை உபயோகித்தனர்; (2) நாணயங்கள்மீது கிரேக்கக் கடவுளர் உருவங்களையும் சிவன் உருவத்தையும் பொறித்தனர்; (3) க்ஷத்ரபர், மஹா க்ஷத்ரபர் என்ற பட்டங்களுடன் ‘ராஜன்’ என்ற இந்திய வார்த்தையையும் தங்கள் பெயர்களுடன் இணைத்துக் - கொண்டனர்; (4) தங்கள் பெயர்களையும் இந்திய முறைக்கேற்ப ஜயதர்மன், ருத்ர தர்மன் ருத்ரசிம்மன், தாமசேனன் என்று மாற்றிக் கொண்டனர்;