பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

11



(3) ‘சாமி’ என்னும் பட்டத்தையும் வைத்துக்கொண்டனர்; (6) தமது நாணயங்களில் இந்திய நாட்டுப் பொருள்களாகிய யானை, நந்தி, பெளத்தர் கோவில் இவற்றைப் பொறித்தனர்: (7) தெலுங்குநாட்டில் இருந்தபொழுது பெளத்த சமயத்திற் பற்றுக்கொண்டிருந்தனர்; (8) காஞ்சியில் இருந்த போது சைவ அல்லது வைணவப் பற்றுடன் விளங்கினர்; (9) ஆந்திர நாட்டில் இருந்தபொழுது சாதவாஹனர் வெளியிட்ட பிராக்ருத மொழியிலேயே தங்கள் பட்டயங்களை வெளியிட்டனர், காஞ்சியைக் கைப்பற்றித் தெற்கே வந்தவுடன் காஞ்சியில் சிறப்புற்றிருந்த வடமொழியில் பட்டயங்களை விடுக்கலாயினர்; (10) வடநாட்டுப் பார்த்திய அரசரைப் போலவே தென்னாட்டுப் பார்த்திய (பல்லவ) அரசரும் வைதிக மதத்தைச் சார்ந்து வேத வேள்விகள் செய்தனர்; (11) இவ்வாறு முற்றிலும் தங்களை இந்துக்களாக்கிக் கொள்ளவே, ‘பஹ்லவர்’ என்ற தமது மரபுப் பெயரையும் ‘பல்லவர்’ என எளிதாக ஒர் எழுத்து மாற்றத்தால் மாற்றிக்கொண்டனர்; (12) இவர்கள் க்ஷத்திரியர்கள்; அங்ஙனம் இருந்தும் இவர்கள் தங்களைப் ‘பாரத்வாஜ கோத்திரத்தார்’ (பிராமணர்) என்றே தங்கள் பட்டயங்களிற் கூறிக்கொண்டது நோக்கத்தக்கது. ‘இவர்கள் கூடித்திரியரே’ என்று கதம்ப முதல் அரசனான மயூரசர்மன் என்ற பிராமணன் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.

4. பார்த்தியர் நாணயங்களிற் காணப்படும் சூரியன், சந்திரன் உருவங்கள் பல்லவர் நாணயங்களிலும் காண்கின்றன.

5. பல்லவ அரசனான சிம்மவிஷ்ணுவின் ஆசனம், இந்தியாவிற்கே புதியது. அது பாரசீகநாட்டுப் பழைய ஆசனங்களைப் போன்றது.