பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

41



அதிசயித்தனர்; அரசனிடம் சென்று, “ஐயனே, அவன் எவ்வாறோ பிழைத்திருக்கிறான். அவனுக்கு விடம் ஊட்டலே தக்கது” என்றனர்.

நஞ்சூட்டல்

சமணச் சார்பு கொண்ட மஹேந்திரவர்மன் அதற்கு உடன்பட்டான். வேலையாட்கள் பால் அமுதில் விடம் கலந்து, அதனைத் திருநாவுக்கரசர்க்கு அளித்தனர். அப்பெரியவர் உண்மையை உணர்ந்து, “நஞ்சுண்ட சிவபெருமானைத் தேவனாகக் கொண்ட அடியவர்க்கு நஞ்சும் அமுதாகும்” என்று கூறி, அப் பாலடிசிலை மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்ந்திருந்தார். இதனை அறிந்த சமண முனிவர் அஞ்சினர்; “இவன் பிழைத்தல் நமக்கெல்லாம். இறுதியேயாகும்” என்று எண்ணி, வேந்தன்பால் சென்று, “தருமசேனன் மந்திரத்தில் தேர்ந்தவன்; அதனால் உயிர் பிழைத்திருக்கிறான். அவனை நினது மதயானையின் முன்னிலையில் விடுவதே தக்கது” என்றனர்.

யானையை ஏவுதல்

திருநாவுக்கரசர் ஒரிடத்தில் அமர்த்தப்பட்டார். அவரை நோக்கிக் கொல்களிறு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. உடனே வழியிலிருந்த பொதுமக்கள் ஒடி ஒளிந்தனர். அக்கொடிய மதயானை தன் துதிக்கையைத் தூக்கியபடி வந்தது. அது தன்னை நோக்கி வருதலைக் கண்ட திருநாவுக்கரசர் சிவபெருமானை நினைந்து, “சுண்ணவெண்சந்தனச் சாந்தும்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அவ்வளவில் அந்தக் கொடிய யானை அச்சிவனடியாரை வலம் வந்தது; எதிரில் தாழ்ந்த்து பின்பு எழுந்தது; அவரை விட்டு விலகிச்