பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பல்லவப் பேரரசர்



கட்டினான். அதற்குத் தன் பெயர் தோன்றக் “குணபர ஈஸ்வரம்” என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.

இவ்வாறு மஹேந்திரன் கட்டியதாகக் கூறப்படும் இக்குணபர ஈஸ்வரம் திருவதிகைப் போலீஸ் நிலையத்திற்கு எதிரே இருக்கின்றது. இன்று இஃது அழிவுற்ற நிலையில் சிறிய கோவிலாகக் காணப்படுகிறது. இதனுள் உள்ள பெரிய லிங்கம் மஹேந்திரன் காலத்ததென்பதில் ஐயமில்லை. மஹேந்திரன் அழித்ததாகக் கூறப்படும் பாடலிபுரத்துச் சமண மடத்தின் சிதைவுகள்,[1] திருப் பாதிரிப்புலியூரிலிருந்து திருவகீந்திரபுரம் (திருவந்தி புரம்) போகும் பாதையில் காணக்கிடக்கின்றன. அங்குச் சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று இன்றும் இருந்து வருகின்றது. மஹேந்திர வர்மனுக்குப் பிறகு, புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்துச் செய்தி ஒன்றும் எந்த நூலிலும் குறிக்கப்படவில்லை. இதனை நோக்க, பெரிய புராணக் கூற்றுப்படி, அது மஹேந்திரனால் அழிக்கப்பட்டு விட்டதென்றே கருதவேண்டுவதாக இருக்கின்றது.

கல்வெட்டுச் சான்று

மஹேந்திரன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைந்தான்; அங்கு ஒரு பெரிய லிங்கத்தை எழுந்தருளச் செய்தான்; அதற்கு எதிர்ப்புறத்துப் பக்கத்துண்கள் இரண்டில் இரண்டு வடமொழிக் கல்வெட்டுகளை வெட்டுவித்தான். அவற்றுள் ஒன்று, காவிரி வருணனையை நிரம்பக் கூறி, “விரும்பத் தக்க


  1. சமணக் கட்டடச் சிதைவுகளும் குணபர ஈஸ்வரமும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் ஆதலால், அவற்றைப் பாதுகாத்த்ல் அரசாங்கத்தார் - பொதுமக்கள் கடமையாகும்.