பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

45



குணங்களையுடைய காவிரியாற்றைக் கண்டு தன் கணவனான சிவபெருமான் அக்காவிரியாகிய நங்கைமீது காதல் கொள்வானோ என்று அஞ்சியவளாய் மலையரசன். மகளான உமையவள், தன் பிறந்தகத்தை விட்டு இம்மலைமீது நின்று, “இவ்யாறு பல்லவனுடையது” என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாள். குணபரன் வானளாவும் இம்மலைக் கோவிலைச் சிவனுக்காக அமைத்தான். குணபரன் அரசாட்சியில் மனுவை ஒத்தவன். அவன் சிவனை உள்ளத்தில் நிலை நிறுத்திய புருஷோத்தமன். அவன் நிகரற்ற இந்த லிங்கத்தை மலைமீது வைத்து, இம்மலையைப் பயனுடையதாக்கினான்” என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு கல்வெட்டு, “குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன். ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும்”[1] என்பது.

சிறந்த சிவ பக்தன்

இவ்விரண்டாம் கல்வெட்டுச் சான்றை நன்கு நோக்குக. “இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய லிங்கம்” என்பது கவனிக்கத் தக்கது. இத்தொடர் பெரிய புராணத்துள் கூறப்படும் . மஹேந்திரனது மத மாற்றத்தை உறுதிப்படுத்துதல் காணலாம். இவன் சைவனாகாமல் சமணனாகவே இருந்திருப்பின், திருநாவுக்கரசர் தொண்டை நாட்டில் சைவப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தியிருத்தல் இயலாது. ஆனால், அவரது சைவப் பிரசாரம் தீவிரமாகப்


  1. S.I.I. Vol.I. 33 and 34.