பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

பல்லவப் பேரரசர்



6. மண்டபப் பட்டு

இவ்விடம் புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்ற புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மஹேந்திரனது வடமொழிக் கல்வெட்டு, கோவில் வாயிலிற் பொறிக்கப்பட்டுள்ளது. அது தென் இந்தியக் கோவில் வரலாற்றுக்கு மிகவும் முககியமானதாகும்.

“பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு ஆகியவர்கட்கு இருப்பிடமாகிய இக்கோவில் கல் இல்லாமலும், மரம் இல்லாமலும், உலோகம் இல்லாமலும், சுண்ணாம்பு இல்லாமலும் விசித்திரசித்தன் என்னும் அரசனால், செய்யப்பட்டது.”

இக்கோயிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. வாயிற் காவலர் பிடித்துள்ள கதைகளிற் பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

7. சீயமங்கலம்[1]

இது வட ஆர்க்காடு ஜில்லாவில் வந்தவாசித் தாலுகாவில் தேசூருக்கு ஒரு கல் தெற்கே உள்ளது. இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் உள்ளது. இங்குள்ள தூணில், ‘அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்னும் பெயர் கொண்ட இக்கோவில், லளிதாங்குரனால் குடையப்பட்டது’ என்பது வெட்டப் பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் உள்ளவற்றை ஒத்துள்ளன. குகையின் இருபுறங்களிலும் சிலைகள் சில காணப்


  1. ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்பது இவ்வாறு குறுகிவிட்டது.