பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

69



தோன்றினான். அவன் வணங்காமுடி மன்னர்களுடைய முடியில் இருக்கும் சூடாமணி போன்றவன்; தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்றவன்; நரசிங்கப் பெருமானே அவதாரம் எடுத்தாற் போன்றவன்; சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்றோடச் செய்தவன். அவன் ஒடும்பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்.”[1]

2. “நரசிம்மவர்மன் வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்றவன் அடிக்கடி வல்லப அரசனைப் பரிய்லம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில், நடந்தபோர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[2]

3. “விஷ்ணுவைப் போன்ற புகழ்பெற்ற - நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டியவன்.”[3]

வாதாபி கொண்டது

“வாதாபி என்ற அசுரனைக் கொன்றழித்த அகத்தியனைப் போன்றவன் நரசிம்மவர்மன்” என்று பட்டயம் குறிப்பதால், நரசிம்மவர்மன் வாதாபியை அழித்தான் என்பது பெறப்படுகின்றது. இதனால், பல்லவன், சாளுக்கியன் மீதிருந்த பகைமையை அவனது தலைநகரத்தை அழித்துத் தீர்த்துக்கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால் முழு நகரமும் அழிக்கப்படவில்லை.


  1. கூரம் பட்டயம்.
  2. உதயசந்திர மங்கலப் பட்டயம்.
  3. வேலூர்ப் பாளையப் பட்டயம்.