பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பல்லவப் பேரரசர்



அழகிய பழைய கட்டடங்கள் பல பிற்காலத்திலும் இருந்தன. இப்படையெடுப்பு ஏறத்தாழ கி.பி. 642இல் நடந்தது. நரசிம்மவர்மன் நாட்டி வைத்த வெற்றித் தூணில் அவனது 13-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. எனவே, வாதாபி நரசிம்மவர்மன் கையில் 13 ஆண்டுகளேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவ்வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன், “வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்” என்று அழைக்கப்பட்டான்.

படைத்தலைவர் பரஞ்சோதியார்

“நரசிம்மவர்மன் ஆட்சியில் படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் என்பவர். அவர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர். அவரே பல்லவர் சாளுக்கியர் போரில் கலந்துகொண்டவர்; சாளுக்கியனைத் துரத்திக்கொண்டே சென்று வாதாபியைக் கைப்பற்றி யானைகளைக் கொண்டு அழித்தவர்; அங்கிருந்த யானைகள் - பரிகள் - பொன் - மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றித் தம் அரசனிடம் சேர்ப்பித்தனர்” என்று பெரிய புராணத்துள் சேக்கிழார் கூறியுள்ளார்.

“மன்னவர்க்குத் தண்டுபொய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாக்த் துளைநெடுங்கை வரையுகைத்தும்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”

இப்போருக்குப் பின்னர் இப்பரஞ்சோதியார் அரசனிடம் பல வரிசைகள் பெற்றுத் தம் சொந்த