பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

75



பெருமாள் கோவில். அதன் சுவர்களில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் அழகிய வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன.

திருச்சிராப்பள்ளி மலைக்கோவில்

இம்மலையின் தென்மேற்கு மூலையில் உள்ள குடைவரைக் கோவில் இம்மன்னன் காலத்தது. அதுவும் பெருமாள் கோவிலே ஆகும்.அதன் மூன்று சுவர்களிலும் உள்ள சிற்பங்கள் பார்ப்ப்வர்க்குத் திகைப்பூட்டவல்ல அற்புத வேலைப்பாடு கொண்டவை. சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி என்பவர் உருவங்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன. கோவில்முன் மர விட்டங்கள் போலக் கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு களிக்கத்தக்கது. இக்கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட ‘குபேரன்’ உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

பிற கோவில்கள்

திரிசிரபுரத்தை அடுத்த திருவெள்ளறை, குடுமியான் மலை, திருமெய்யம் ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோவில்களில் வைணவ சம்பந்தமானவை இவன் காலத்தனவாகும்.

மாமல்லபுரத்து மண்டபங்கள்

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்றும் நரசிம்மவர்மன் அமைத்த குடைவரைக் கோவில்களே. ஆகும். இவற்றில் உள்ள சிற்பங்கள் கண்ணைக் கவரத்