பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பல்லவப் பேரரசர்



(மஹாமல்லபுரத்திலிருந்து) பல கப்பல்கள் இலங்கைக்குப் பிரயாண்மாகின்றன. நான் பாண்டிய நாடு சென்று கண்டேன். அங்குச் சிலரே. உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பெயர் அளவில் பெளத்தராக இருந்துகொண்டு வாணிபத் துறையில் பொருளீட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அங்குப் பெளத்த சமயம் வீழ்நிலை அடையத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.”

அக்கால அரசர்

சாளுக்கியர்

இவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துங்கபத்திரை யாறு வரை பேரரசை ஏற்படுத்தி ஆண்டவர்கள். இவர்கள் பல்லவர்க்குக் கொடிய பகைவராக இருந்து, அவர்களுடன் ஒயாது போரிட்டு வந்தனர். இரண்டாம் புலிகேசி வரலாறு முன்பே குறிக்கப்பட்டதன்றோ? நரசிம்மவர்மனது நீண்ட ஆட்சியில் (கி.பி. 635-668) இரண்டாம் புலிகேசியும் அவன் மகனான முதல் விக்கிரமாதித்தனும் சாளுக்கிய அரசராக இருந்தனர். முதல் விக்கிரமாதித்தன் ஏறத்தாழ கி.பி, 655இல் அரசுகட்டில் ஏறினான். 680 வரை அரசாண்டான்.

கங்கர்

காவிரிக்குத் தென்பாற்பட்ட குடகு நாட்டையும் தென்மைசூர்ப் பகுதியையும் துர்விநீதன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பிறகு பூவிக்கிரமன் (கி.பி.640-670) ஆட்சி புரிந்தான்.