பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

87



பேரரசராக இருந்து வாழ்ந்தனர் எனின், அவர் தம் பேராற்றலை என்னென்பது! இத்துணைப் பகையரசரையும் வென்று, வன்மைமிக்க சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியைத் தொலைத்துச் சாளுக்கியர் தலைநகரில் தன் வெற்றித் துணை நாட்டிய நரசிம்மவர்மன் ஆற்றலை என்னெனப் பாராட்டுவது!

சமரச சமய நிலை

மஹாமல்லன் இவ்வளவு பெரு வெற்றி பெற்றதற்கு அவனுடைய மனவலிமையும் படைவலிமையும் செங்கோலுமே காரணமாகும். அவன் சிறந்த வைணவனாக இருந்தும், அரசன் என்ற முறையில் எல்லாச் சமயங்களையும் சம நோக்குடன் கவனித்து வந்தான் இதனை, ஹியூன்-ஸங் அவனைப் பற்றிக்குறிப்பதால் அறியலாம். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஆகிய சைவ சமய குரவர் இவ்வைணவ அரசன் காலத்தில்தான் தங்கள் சைவு சமயப் பிரசாரத்தை நாடு முழுவதும் செய்தனர். குடிகள் தங்கள் விருப்பத்திற்கிசைந்த சமயங்களைத் தழுவி மன அமைதியுடன் வாழ்ந்தார்கள்.


11. சமய நிலை

பல்லவ நாட்டுச் சமயங்கள்

மஹேந்திரவர்மன் வரைந்துள்ள மத்தவிலாசத் தாலும் சைவ சமயக் குரவர் பாடியருளிய முதல் ஆறு திருமுறைகளாலும் ஹியூன்-ஸங் எழுதிவைத்த குறிப்புகளாலும் - பல்லவப் பெருநாட்டில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என்னும் சமயங்கள்