பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

91


முழுவதும் பன்முறை சுற்றிச் சைவப்பயிரைத் தழையச் செய்தனர். இவ்விருவரைச் சூழ்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி அணியாக நாடு முழுவதும் நடந்தனர்; இருநூற்றுக்கு மேற்பட்ட சிவத்தலங்களைத் தரிசித்துப் பாடல்கள் பாடினர். இவர்கள் பண்ணோடு பாடி ஆடினதால் மக்கள் பண்ணிலும் பக்தியிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர். சைவனான மஹேந்திரவர்மனும் வைணவனான நரசிம்மவர்மனும் கோவில்களை நன்முறையில் வைத்துக் கோவில் ஆட்சியைக் கவனித்து வந்தமையாற்றான், இந்நாயன்மார்சென்ற கோவில்களில் எல்லாம் சிறப்புப் பெற்றனர்.

பிற நாயன்மார்கள்

திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் வாழ்ந்த, காலத்தில் மஹேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் இவராவர்:(1) பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர், (2) குங்கிலியக்கலய நாயனார், (3) முருக நாயனார், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (5) திருநீலநக்கர், (6) அப்பூதி அடிகள், (7) நெடுமாறன், (8) மங்கையர்க்கரசியார், (9) பாண்டியன் அமைச்சர். குல்ச்சிறை நாயனார். முற்சொன்ன இருவரையும் கூட்டினால் நாயன்மார் பதினொருவர் ஆவர்.

நாயன்மார் - சமயத் தொண்டர்

இந்த நாயன்மாருட் பலர் தாம் தாம் வாழ்ந்த இடங்களில் இருந்த சிவன் கோவில்களில் தொண்டு செய்துவந்தனர்; மடங்கள் வைத்துச் சைவ சமயக் கல்வியைப் பரப்பி வந்தனர். தண்ணிர்ப்பந்தல், உணவுச்