பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

95



திருநாவுக்கரசரும் தமது தேவார்த்திற் குறித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பல்லவ நாட்டுச் சைவத்தை வளம்பெற வளர்த்தனர் என்னல் தவறாகாது.

சைவத் திருமுறைகள்

திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களும் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களும் பல்லவர்கால சமய இலக்கியம் என்னலாம். இவை ஏறத்தாழ 6000-க்கு மேற்பட்ட பாடல்கள் கொண்டவை. இவை பக்திச் சுவையை ஊட்டுவதுடன், நாட்டின் ஊர்களின் இயற்கை அழகு, வரலாற்றுக் குறிப்புகள், சமணர்-பெளத்தர்-பிற நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள், அக்காலத் தமிழ்நடை முதலிய பல சிறந்த பொருள் பற்றிய குறிப்புகளை நமக்கு உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, அவை; ‘தமிழ்ப் பண்கள் இவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் இசை நூல்களாகவும் உதவுகின்றன. சமய நிலையை மட்டும் நோக்குமிடத்து, இவ்விரண்டு பல்லவ வேந்தர் காலமும் சைவ சமய வளர்ச்சியின் பொற்காலம் என்னலாம்.


12. அரசியல்

நாட்டுப் பிரிவு

பல்லவப் பெருநாடு முண்டராஷ்டிரம், வெங்கோராஷ்டிரம், சாதவாஹனராஷ்டிரம், துண்டக