பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை

பல்லவர் வரலாறு என்னும் இவ்வாராய்ச்சி நூல் தமிழகத்திற்குப் புதியமுறையில் தரப்படும் தமிழ் விருந்தாகும், பல்லவரைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் பலவும், கட்டுரைகள் பலவும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆயின், அவற்றிற் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் நன்கு ஆராய்ந்து தமிழில் இதுகாறும் செம்மையுற எழுதப்படவில்லை. காலஞ் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் வெளிப்படுத்தினார்கள். அவ் வரலாற்று நூற்குப் பிறகு வெளிப்போந்த ஆராய்ச்சி நூல்கள் பல: சிறந்த கட்டுரைகள் பல; கிடைத்தகல்வெட்டுச்செய்திகள் பல. மேலும், அவ்வரலாற்று நூல் இன்று கிடைக்கு மாறில்லை. வித்துவான் தேர்விற்கு அது பாடமாக வைக்கப் பட்டுள்ளது. நூலின்றி மாணவர் இடர்ப்படுகின்றனர். இக் குறைகள் அனைத்தையும் உளங்கொண்டு இந்நூல் எழுதப் பெற்றதாகும்.

பல்லவர் காலத்து இலக்கியங்களும், ஏறத்தாழப் பல்லவர் காலத்தை நன்முறையிற் படம் பிடித்துக் காட்டும் பெரிய புராணமும் தமிழ்க்கருவி நூற்களாகக் கொள்ளப்பெற்றன. இந்நூலின்கண் புதிய வரலாற்று முடிபுகள் பல குறிக்கப் பெற்றுள. அவை ஆராய்ச்சியாளர் நடுவுநிலைமை வழாத ஆராய்ச்சிக்கு உரியவாகும். அவற்றுள், இடைக்காலப் பல்லவர் போர்கள், நெடுமாறன் முதல் விக்கிரமாதித்தன் போர் (நெல்வேலிப் போர்), கந்தசிஷ்யன் மீட்ட ‘கடிகை’, இராசசிம்மன் காலத்துப் போர்கள் என்பன குறிக்கத்தக்கன.

வடமொழிக் கல்வெட்டுகளையும் வடமொழியில் உள்ள மத்த விலாசத்தையும் எனக்குப் படித்துக்காட்டி என்னுடன் இருந்து ஆராய்ந்தவர் - சென்னைப் பல்கலைக்கழக வரலாற்று ஆராய்ச்சி மாணவராக இருந்தவரும், இன்று பெல்காம்-லிங்காரசுக் கல்லூரி வரலாற்று விரிவுரையாளராக இருக்கின்ற வருமாகிய திருவாளர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/10&oldid=572877" இலிருந்து மீள்விக்கப்பட்டது