பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிம்ம விஷ்ணு

81இயலாதன்றோ? இவன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்பதை இலக்கியச் சான்றும் உறுதிப்படுத்துகின்றது.[1]

“பல்லவர் மரபில் சிம்மவிஷ்ணு என்பவன் தோன்றினான்; கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன் தன்வீரத்தாலும்பெருந்தன்மையாலும் பகை அரசர்களுடைய அசையும் பொருள்களையும் அசையாப் பொருள்களையும் தனக்கு உரிமை ஆக்கிக்கொண்டான்” (அவந்தி சுந்தரி கதா சாரம்). இக் குறிப்புக் காசக்குடிப் பட்டயச் செய்தியைப் போன்று இருத்தல் காணத்தக்கது. ‘கற்றவர் கூட்டத்தினின்று இறுதிப் பகைமையை என்பது கவனிக்கற்பாலது. ‘கற்றவர் கூட்டம் இருக்கும் இடத்தினின்று (காஞ்சிபுரத்தினின்று) இறுதியாகப் பகைவரை நீக்கினான்’ என்பதே இதன் பொருள். சத்தியசேனன் என்னும் அரசரிடமிருந்து இருபிறப்பாளரது கடிகாவை இரண்டாம் கந்தவர்மன் மீட்டான் என்றபோதும், இருபிறப்பாளரது கடிகா (கல்லூரி) இருந்த காஞ்சீபுரத்தை என்றே பொருள் கொள்ளப்பட்டது.[2] எனவே,


  1. 1. ‘கொங்குதேச ராசாக்கள் வரலாற்றைக் கானின், துர்விநீதன் காஞ்சி உள்ளிட்ட திராவிடத்தை வென்றான் என்பது காணப்படுகிறது” என (Swell’s List of the antiquarian Remains in the Madras Presidency’ p,177) கூறல், காண்க.

    2. “சாளுக்கிய இரணராகன், முதல் புலிகேசி இவர்கள் காலத்திற் சாளுக்கிய பல்லவர் போர்கள் நடந்தன. முதற் புலிகேசி எல்லோரையும் தான் அடக்கியதாகக் கூறிக்கொண்ட கி.பி. 560இல் பரிவேள்வி செய்தான்” என அறிஞர் (Mr. V.K. Rao’s “Ganges of Talakad’, p.38) கூறல் காண்க.

    எனவே, குமார விஷ்ணுவுக்குப் பிறகு காஞ்சிகளப்பிரர் கைப்பட்டதோ, கங்கர் கைப்பட்டதோ, சாளுக்கியர் கைப்பட்டதோ தெரியவில்லை. கி.பி. 475 முதல் 515 வரை அரசாண்டகதம்ப அரசனான இரவிவர்மன், தான்காஞ்சி அரசனை (சண்டதண்டனை) அழித்தான் என்று ஹல்சி பட்டயம் கூறலால், காஞ்சி கதம்பர் கைக்கு மாறியதோ என்பது ஐயமாக இருக்கிறது. இது நன்கு ஆராயவேண்டும் செய்தியாகும். பிற சான்றுகள்கிடைத்தாற்றான்.இஃது ஒரு முடிவுக்கு வருதல் கூடும்.
  2. R. Gopalan’s Pallavas of Kanchi, p. 13.