பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிம்ம விஷ்ணு

83



பரம பாகவதனாக இருந்தவன் என்பது தெளிவு. இவன் சீயமங்கலத்தில் உள்ள குகைக்கோவிலை அமைத்திருக்கலாம். சிங்க உருவங்களும் மகேந்திரன் கல்வெட்டும் உடைய அக் குகைக் கோவில் சிம்ம விஷ்ணுவின் காலத்ததாக இருக்கலாம்.[1]

ஆதிவராகர் கோவில்

மகாபலிபுரத்தில் ஆதிவராகர் கோவில் இருக்கின்றது. அக் கோவிலில் இரண்டு உருவச்சிலைகள் உள்ளன. இவற்றைக் கர்னல் மக்கன்ஸி, பெர்கூசன், பர்கஸ் முதலிய அறிஞர் கண்டு தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இவை இன்னாரைக் குறிப்பன என்பதை அவர்கள் கண்டறியக் கூடவில்லை. இச் சிலைகள் 1913இல் கண்ட இராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரிகளும் முதலில் இவையாரைக் குறிப்பன என்பதை உணரவில்லை. பின்னர் 1922இல் புதைபொருள் ஆராய்ச்சியாளர் இச் சிலைகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக்கண்டு பிடித்தனர். பின்னரே, இவை சிம்ம விஷ்ணுவையும் அவன் மகனான முதலாம் மகேந்திரவர்மனையும் குறிப்பன என்பது வெளிப்பட்டது.[2] பின்னர்க் கிருஷ்ண சாஸ்திரிகள் அக் கல்வெட்டுகளை நன்கு பார்வையிட்டுத் தம் கருத்துக்களை வெளியிட்டனர். கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்துக்கள் கொண்டவை. ஆதிவராகர் குகைக் கோவிலுள்ள வடபுறப் பாறையில் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அதன் அடியில் ஓர் ஆண் உருவம் உட்கார்ந்த நிலையிலுள்ளது. அதன் நிலைமீது உயர்ந்த முடி (கீரீடம்)உள்ளது. மார்பிலும் கழுத்திலும் அணிகள் காணப்படுகின்றன. அவ்வுரு வத்திற்கு இருபுறங்களிலும் முடியணிந்த பெண்மணிகளின் உருவங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. அவை சிம்ம விஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிரே தென்புறப் பாறைமீது ‘ஸ்ரீ மகேந்திர போதாதிராஜன்’ என்பது பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், முடியும் அணிகளும்


  1. Prof. Dubrell’s “Pallava Antiquities’, vol.Ip.40
  2. Archaeological Report 1922 - 3, p.94.