பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
மகேந்திரவர்மன்


இவன் வல்லம், தனவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் சிவன் கோயில்களையும், மகேந்திரவாடியில் பெருமாள் கோவிலையும் அமைந்துள்ளான். இவை அனைத்தும் இவன் சமனானாக இருந்து செய்திருத்தல் இயலாது. இவ்வேலை நடைபெறச் சில ஆண்டுகள் ஆகி இருக்கலாம். எனவே, இவன்சுமார், கி.பி. 620 இல் சமணத்தை விட்டுச் சைவனாகி இருக்கலாம். இவன் சமணனாக இருந்தபொழுது சமணர் சொற்கேட்டு அப்பர்க்குப் பலகொடுமைகள் இழைத்தான். இறுதியில் இவன்சைவன் ஆனதும், குடிகள் சைவராக மாறியதில் வியப்பில்லை அன்றோ? எனவே, தொண்டை நாட்டில், அதுகாறும் உயர்நிலையில் இருந்த சமணம் இழிநிலை உற்றது: சைவ சமயம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. அரசனே திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து. அக் கற்களைக் கொணர்ந்து திருவதிகையில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி, அதற்குத்தன் பெயரால் குணபரம் ஈச்சரம்[1] என்று பெயரிட்டு வழங்கினான் எனின். மகேந்திரன் காலத்தில் தொண்டை நாட்டுச் சைவநிலையை என்னென்பது மகேந்திரன் ஆட்சிதொண்டை நாட்டோடு நின்றதில்லை அன்றோ? அது புதுக்கோட்டைவரை பரவி இருந்ததால்,பல்லவ நாடு முழுவதும் சைவ சமய வளர்ச்சி. வெளிப்படையாகத் தோன்றியது.

இவன் காலத்தரசர்

பல்லவர்க்குக்கொடிய பகைவரான மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணையாறு வரை ஆண்டு வந்தனர். சாளுக்கியர் படையெடுப்பால் நாட்டை இழந்த கதம்பர் சிற்றரசராக இருந்தனர். இவர்கட்குத் தெற்கே இற்றை மைசூர்ப் பகுதியைக் கங்கர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகரம் தழைக்காடு என்பது. வடக்கே கோதாவரிக்கும் கிருஷ்ணையாற்றிற்கும் இடையில் கீழைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். தெற்கே பாண்டியர் வன்மையுடன்


  1. குணபரன் - மகேந்திரவர்மன் - திருநாவுக்கரசர் புராணம், செ.146.