பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பல்லவர் வரலாறு



4. மாடங்களில் மேல் உள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி'யே ஆகும்.

5. பெரும்பாலும் தூண்களில் கல்வெட்டுகள் காணப்படும்; அரசன் பட்டப் பெயர்களும் பிற செய்திகளும் பொறிக்கப் பட்டிருக்கும்.

மகேந்திரவர்மனும் மகாபலிபுரமும்

மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் பழைமையான அமைப்பு உடையவை ஆதிவராகர் கோவில் ஆகும். அதனைச் சிம்மவிஷ்ணு அமைத்தான் என்று பலர் கூறுவர். அதனை அமைத்தவன் மகேந்திரவர்மனே என்பர் சிலர் அதற்கேற்ற காரணமுங் கூறுவர்.[1] மகாபலிபுரத்தில் உள்ள கோவில்கள் நரசிம்மன் அமைத்தவையே என்பர் பலர். ஆயினும், அவற்றை நன்கு சோதித்துப் பார்ப்பின், தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மன் காலத்தவை என்பதை நன்குணரலாம். “தருமராசர் மண்டபம் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் மண்டபப் பட்டில் உள்ள மகேந்திரவர்மன் அமைத்த கோவிலைப் போன்ற வேலைமுறை கொண்டதாகக் காண்கிறது. முன்னதில், பின்சுவரில் வெட்டப்பட்டுள்ள (பிரமன், விஷ்ணு, சிவன் இவர்க்காக) மூன்று உள்ளிடங்கள் இருத்தல் போலவே, தருமராசர் மண்டபத்திலும் இருத்தல் கவனித்தற்குரியது. கொடிக்கால் மண்டபம் மகேந்திரவாடியில் உள்ள பெருமாள் கோவிலின் அளவு, வேலைப்பாடு முதலியவற்றைக் கொண்டதாகும். வாயிற்காவலர் நிலையிற்றான் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மகேந்திரவாடியில் உள்ள வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; நின்ற நிலையினர்; முன்புறம் நோக்கியவர். கொடிக்கால் மண்டபத்தில் உள்ள வாயிற் காவலர் பெண்கள்; என்னை? அக் கோவில் துர்க்கையின் கோவிலாதலால் என்க. எனினும், அப் பெண்களின் பிற அமைப்புகள் (ஆண்) வாயிற்காவலர்


  1. Heras’s “Studies in Pallava History’, pp.71-75.