பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகேந்திரவர்மன்

103



(1) திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டுகள்:

(1) யாற்றை விரும்பும் இறைவன்-தோட்டங்களையும் விரும்பத்தக்க குணங்களையும் உடைய காவிரி யாற்றைக் கண்டு, அவள்மீது காதல் கொள்வான் என்று மலையரையன் மகள் ஐயமுற்றுத் தான் பிறந்தகத்தை விட்டு, இம் மலைமீது நின்று கொண்டு. ‘இவயாறு பல்லவனது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

(2) குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன் ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு (இக் கோவிலில் அவன் வைத்துப் பூசித்த) லிங்கத்தால் உலகெலாம் பரவட்டும்.

(2) சீயமங்கலக் கல்வெட்டு: அவனிபாஜன பல்லவேசுரம் என்னும் இக் கோவிலை லளிதாங்குர மன்னன் தன் உள்ளத்தைப் பேழையாகவும் நன்மையை அதனுள் வைக்கும் அணியாகவும் கொண்டு அமைத்தான்.

(3) மகேந்திரவாடிக் கல்வெட்டு: நல்லவர் அனைவரும் மிகப் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதும் ஆகிய அழகிய ‘மகேந்திர விஷ்ணுக்ருகம்’ என்னும் முராரியின் பெருங்கற்கோவிலை மகேந்திரனது பேரூரில் மகேந்திர தடாகத்தின் கரையில் பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்.[1]

மகேந்திரன் பட்டப் பெயர்கள்

இப் பெருந்தகைக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. அவற்றுள் சில வருமாறு: குணபரன், அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்திய சந்தன், விசித்திர சித்தன்,[2] நரேந்திரன், சேத்தகாரி,[3] போத்தரையன், சத்துரு மல்லன்,


  1. S.I.I. vol.I, pp.29,30,40.
  2. சிற்ப ஓவியக் கலைஞன்.
  3. கோவில்கள் அமைத்தவன்.