பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110
பல்லவர் வரலாறு


இன்னும் அப் பெயருடன் இருக்கிறது.அது காஞ்சிக்கு இருபது கல் தொலைவில் உள்ளது. பிற இடங்கள் இன்னவை எனக்குறிக்கக்கூட வில்லை. வைப்புமுறையை நோக்கின், காஞ்சியிலிருந்து செல்லும் ஒருவன் பரியலம். மணிமங்கலம் சூரமாரம் என்னும் ஊர்களை முறையே கடக்க வேண்டியவன் என்பது புலனாகிறது. புலிகேசி முதல் படையெடுப்பிலும்காஞ்சிவரை எதிர்ப்பின்றி வந்துவிட்டான் என்பதையும் இம் முறையும் எதிர்ப்பின்றிக் காஞ்சிவரை வந்தனன் என்பதையும் நோக்க-எதிரியைத் தம் நாட்டிற்குள் நன்கு இழுத்துப் பிறர் உதவியை அவன் பெறாதுவாறு செய்து, அவனை வளைத்து முறியடித்தலையே மகேந்திரவர்மனும் அவன் மகனான நரசிம்மவர்மனும் நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது நன்கு விளங்குகிறது. சாளுக்கியசேனை நெடுந்துரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே.அந்நிலையில் புதிய பல்லவர்சேனை அவர்களை எதிர்த்து வளைத்து அழித்தலும் தோற்றோடச் செய்தலும் எளிதான செயலே ஆகும். இந் நோக்கம் கொண்டே பல்லவர் இச் சூழ்ச்சி முறையைக் கையாண்டனர் போலும் மேலும், பல்லவர் தம் நாட்டு இடங்களை நன்கறிவர். எந்த இடுக்கான இடத்தில் பகைவரை மடக்கி அடிக்கலாம் என்பதைத்தம் நாட்டிற்றான்.அவர்கள் நன்கறிதல் கூடும்.

முதலாம் விக்கிரமாதித்தன் (சாளுக்கியன்) விடுத்த கல்நூல் பட்டயங்களில், ‘இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப் பட்டான்’ என்பது காணப்படுகிறது. இச் செய்திக்குச் சான்று என்னை? மூவருள் ஒருவன் நரசிம்மவர்மன், மற்ற இருவரும் யாவர்? வேண்டுமாயின் அவருள் ஒருவனாகச் சிம்மவிஷ்ணு இளவலான இரண்யவர்மன் மரபினருள் ஒருவனைக் கொள்ளலாம்; அவர்கள் தெலுங்கு நாட்டில் பல்லவர் மாகாணத் தலைவராக இருந்தனராதலின்[1] என்க. மூன்றாம்.அரசன் யாவன்? இதற்கு விடை இலங்கை வரலாறு இயம்புதல் காண்க; ‘மானவன்மன்’ என்னும் இலங்கை அரசன் பகைவனால் பட்டம் இழந்து நரசிம்மனிடம்


  1. Indian Antiquary, Vol. X, p.134.