பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
பல்லவர் வரலாறு


தலைநகரை அழித்துத் தீர்த்துக் கொண்டான் என்பது தெரிகிறது. நகரத்தின் பல இடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். கோவில்கள் வருவாய் இன்றித் தத்தளித்தன; பல அழகிய பழைய கட்டடங்கள் இன்று இருத்தலால், நகரம் முழுவதும் ,ாழாக்கப்படவில்லை என்பது தெளிவு. பல்லவன் வாதாபி கொண்ட காலம் கி.பி. 642 என்பர் ஆராய்ச்சியாளர். அந் நகரம் ஏறத்தாழ 13 ஆண்டுகள் பல்லவர்கையில் இருந்ததென்னலாம் (கி.பி. 642-655).[1] வாதாபியில் தக்கிண-ஈரப்பன் கோவிலுக்கருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அது சிதைந்து இருத்தலால், வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்னும் சொல்லுமே படிக்கக் கூடியனவாக உள்ளன. நரசிம்மவர்மன்தன் வெற்றியை அத்துண்மீது பொறித்தனன் போலும்![2]

சேனைத் தலைவர் - பரஞ்சோதியார்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனது உயர் அலுவலாளராக இருந்த சேக்கிழார் பெருமான். இவ்வாதாபி கொண்ட செய்தியைத் தாம் கேட்டு அறிந்தவரை கூறியுள்ளது காண்க:

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித்
தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”[3]

இதனால், (1) நரசிம்மவர்மனின் தானைத் தலைவர் அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவரான, சிறுத்தொண்டர் என்ற பரஞ்சோதியார் என்பதும், (2) அவரே வாதாபியுள் நுழைந்து


  1. Dr. S.K. Aiyangar’s int. to the “Pallavas of Kanchi, p.27.
  2. Indian Antiquary,Vol IX. p. 100
  3. சிறுத்தொண்டர் புராணம், செ.6.