பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
114
பல்லவர் வரலாறு


நரசிம்மவர்மன்தன்னை ‘வாதாபி கொண்டவன்’[1] என்று அழைத்துக் கொண்டான்.

பல்லவர் - பாண்டியர் போர்

நரசிம்மவர்மன் காலத்தில் தமிழ்நாட்டில் தம்மாட்சியோடு இருந்தவர் பாண்டியரே ஆவர்; அவருள் நான்காம் அரசனான அரிகேசரி பரங்குசன் என்ற நெடுமாறன் கி.பி. 640 முதல் 680 வரை ஆண்டுவந்தான். இவன் சோரையும் பிற தென்னாட்டுக் குறுநில மன்னரையும் அடக்கித் தெற்கே பேரரசனாக இருந்தவன். இவன் சோழனிடம் பெண்கொண்டிருந்தான்; கொடும்பாளுரை ஆண்ட களப்பிரர் இவனுக்கு உட்பட்டிருந்தனர். சுருங்கக் கூறின், இவன் தெற்கே சேர,சோழ, பாண்டியர், களப்பிரர் தலைவன் எனக் கூறலாம்.

பட்டயங்கள்

இவன் ‘சங்கரமங்கை’ என்ற இடத்தில் பல்லவனைப் புறங்கண்டான்’ என்று சின்னமனூர்ப் பட்டயம் கூறுகின்றது. ‘நரசிம்மவர்மன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான்’ என்று கூரம் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டு கூற்றுக்களையும் நோக்க நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவர் - பாண்டியர் போர் நடந்ததென்றே கருதுதல் வேண்டும்.

போர் நடத்த காலம்

ஆயின், இப்போர் எப்பொழுது நடைபெற்றது? பல்லவன் இரண்டாம் புலிகேசியைப் போரிட்டுத் துரத்திச் சென்ற காலத்திற் நான் இது நடைபெற்றதாகல் வேண்டும். என்னை? புலிகேசி தனது முதற் படையெடுப்பில், ‘காவிரிக்கரையை அடைந்து தமிழரசர் மன மகிழப் பல்லவனைப் புறங்கண்டான்’ எனச்சாளுக்கியர் பட்டயம் கூறலால் என்க. இரண்டாம் புலிகேசி பல்லவ நாட்டில் நுழைந்த வுடன், அவனை எதிர்த்துத் துரத்தலே பல்லவனது பெருவேலை ஆயிற்று. அவன் தனது முழுவன்மையும் சேர்த்துப் புலிகேசியைத்


  1. Ibdi. Vol. X, P.100.