பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
115
நரசிம்மவர்மன்


தாக்கிப் பல இடங்களிற் புறங்கண்டு இறுதியில் வாதாபியையும் அழித்தான் அன்றோ? அந்தச் சமயமே, சேர, சோழ, களப்பிரரைச் சேர்த்துக்கொண்டு பாண்டியன் தெற்கே இருந்து பல்லவநாட்டைத் தாக்க வசதியானது.

முடிவு

இதனை உணர்ந்துதான் போலும், நரசிம்மவர்மன் வாதாபிப் படையெடுப்பைத் தன் தானைத் தலைவரான பரஞ் சோதியாரிடம் ஒப்படைத்துத்தான் தெற்கே நோக்கிச் சென்று,தமிழரசரை வென்று துரத்தினான். முதலில் நரசிம்மவர்மனது எல்லைப்புறப் படை சங்கரமங்கையில்தோல்வியுற்றிருத்தல்வேண்டும்;பிறகுநரசிம்மன் பெரும்படை வந்தவுடன் போர் பல்லவர்க்குச் சாதகமாக மாறியிருத்தல் வேண்டும். இங்ஙனம் விளக்கமாகக் கொள்ளின் பல்லவர்-பாண்டியர் பட்டயக்கூற்றுகள் பொருத்தமாதல் உணரலாம்.

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம் புலிகேசிக்குப்பிறகுகி.பி. 642 முதல் கி.பி. 654 வரை சாளுக்கிய நாடு குழப்பத்தில் இருந்தது. இரண்டாம் புலிகேசியின் மக்கள் மூவர். அவர் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன் என்பவர். சந்திராதித்தன் இறந்தபிறகு, பின் இருவர்க்கும் அரியணை பற்றிய பூசல் உண்டாயிற்று. ஆதித்தவர்மன் நரசிம்மவர்மன் துணையை வேண்டினான். விக்கிரமாதித்தன் தன் தாய்வழிப் பாட்டனான துர்விநித கங்கன் துணையை நாடினான். துர்வி நீதற்கு நரசிம்மன்மேல் தீராப் பகைமை உண்டு. என்னை? நரசிம்மன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் துர்விநீதனுடைய ஒன்றுவிட்ட தம்பியை அதற்கு அரசனாக்கி வைத்திருந்தமையால் என்க. துர்விநீதன் தன் படையுடன் விக்கிரமாதித்தற்கு உதவி செய்தான். நரசிம்மன் ஆதித்தவர்மற்குப் படை உதவினன்போலும்! ‘துர்விநீதன், இராவணன் என்று அனைவரும் அஞ்சத்தக்க காஞ்சிநகரக் காடுவெட்டியை வென்ற பிறகு, தன் மகள் மகனைச் சயசிம்ம வல்லபனது நாட்டிற்கு அரசன்