பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

121



நரசிம்மவர்மன் மகாபலிபுரத்தில் மூவகை வேலைப்பாடுகளைக் காட்டியுள்ளான். அவை (1) குகைக் கோவில்கள், (2) தேவர்கள் (3) கற்சிலைகள் என்பன.

(1) குகைக் கோவில்கள்

மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய இம் மூன்றும் நரசிம்மன் அமைத்த குகைக் கோவில்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். இம் மண்டபத் தூண்களில் காணப்படும்வேலைப்பாடும் சிறப்பாகவராக மண்டபத்தூண்களில் காணப்படும் சிறந்த வேலைப்பாடும், வாதாபியில் உள்ள தூண்களில் உள்ள வேலைப்பாட்டையே ஒத்துள்ளன. இவ் வேலைப்பாடு கி.பி. 642இல் வாதாபியில் இருந்து மகாபலிபுரம் வந்து, பிறகு தென் இந்தியா முழுவதும் பரவிவிட்டது. தூண்களின் மேலிருந்து கூரை வரையுள்ள வேலைப்பாடு, பிற்காலச் சோழர் கோவில்களில் காணப்படுதல் காண்க.

(1) குகைக்கோவிற் சிற்பங்கள்:- வாதாபி-குகைக்கோவிற் சுவர்களில் சிற்ப வேலை மிகுதியாக உண்டு. அவ்வேலை நரசிம்மன் அமைத்த குகைக்கோவிற் சுவர்களிலும் காணலாம். இவ் வேலைப்பாடு, சுவர்களை அணி செய்வதோடு. அவையுள்ள இடம் சுவர் என்னும் எண்ணத்தையே மறக்கச் செய்வது கவனிக்கத்தக்கது. வாதாபி-குகைக்கோவில் சுவர்களில் உள்ள புராணச் செய்திகளைக் குறிக்கும் ஓவியங்கள் பல மகாபலிபுரத்திலும் காணப்படல் கவனித்தற்குரியது. வராக அவதாரம, வாமன அவதாரம் ஆகிய இரண்டும் ஈரிடத்துக் குகைக் கோவில்களிலும் இருத்தல் காண்க. கஜலக்குமி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் ஈரிடத்துக் குகைக்கோவில்களிலும் இருக்கின்றன. மகிடாசுர மண்டபச்சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பாம்பனைப்பள்ளி (அநந்த சயனம்) உண்டவல்லி குகைக் கோவில் சுவரில் உள்ளதைப் போன்று இருக்கிறது. மற்ற உருவங்களும் இரண்டிடத்தும் ஒத்திருக்கின்றன. ஆயின், மகிடாசூரனை வெல்லுதலைக் குறிக்கும் சிற்பவேலை