பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நரசிம்மவர்மன்

125



இந்தக் கோவில்களின் முன்புறம், இவற்றில் உறைந்த தெய்வங்கட்குரிய ஊர்திகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன.அவை நந்தி, சிங்கம், யானை என்பன. அவை முறையே சிவபெருமான், துர்க்கை, இந்திரன்[1] இவர்தம் ஊர்திகள் ஆகும்.

(3) கற்சிற்பங்கள்

பாறைகள் மீது புராணக் கதைகளைப் பாடல்கள் வாயிலாக விளங்கும் முறையில் நரசிம்மவர்மன் பெயர் பெற்றவன். இதற்கு மகிடாசுர மண்டபச் சுவரில் உள்ள சிற்பங்களே போதியவை. எனினும், அவற்றை விடப் பெரிய பாறைகள் மீது செதுக்கியுள்ள கோவர்த்தன மலையைக் கண்ணன் ஏந்தி நிற்றல், கங்கைக் காட்சி ஆகிய இரண்டுமே கண்கொண்டு பார்க்கத்தக்கவை.

(1) கோவர்த்தன மலையைப் பிடித்துள்ள கண்ணனும் அவன் அருகில் உள்ள பலராமனும் பெரியவராகத் தெய்வத் தன்மையுடன் காணப்படுகின்றனர். ஏனையோர் சிறியவர்களாகக் காண்கின்றனர். அம்-மக்களது கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவடைந்த மன நிலையும் சிலைகளில் நன்கு உணர்த்தப்ப்ட்டுள்ளன. இவர்கட்கு இடையே இடையர் வாழ்க்கையைக் குறிக்கும் சில காட்சிகளைச் சிற்பிகள் மலையடியில்காட்டியிருத்தல் போற்றத்தக்கது. அக் காலச் சிற்பிகளது கூர்த்த அறிவு வியத்தற்குரியதே ஆகும்.அக்காட்சிகளில் வியக்கத்தக்கது. கறவையின் காட்சி. ஒருவன் பால் கறக்கிறான். பசு தன் கன்றை நக்குகிறது. இந்த வேலைப்பாடு தெளிவானதும் அழகானதுமாகும்.

(2) கங்கைக்கரைக் காட்சி-இதனை ‘அர்ச்சுனன் தவம் எனப் பலர் கூறுவர்.[2] ஆனால், இங்குள்ள காட்சிகள் அதற்கு மாறாகவே இருக் கின்றன. ஆறு - (மலைமீதிருந்த தண்ணி விழுந்து கொண்டிருக்கப்


  1. இந்திரன் கோவிலா, ஐராவதேசுவரர் (சிவனார்) கோவிலா என்பது புரியவில்லை. சிலப்பதிகார காலத்தில் ஐராவதத்திற்குக் கோவில் இருந்தமை தெளிவு. இஃது ஆய்வுக்குரியது.
  2. A.W.T. Iyer’s S. Indian Architecture Vol.Il-B.p.227.