பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பல்லவர் வரலாறு



பழைய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இன்னும் காணப்படுகின்றன. அதன் நடுவில் நாகர் மகிழ்ச்சியோடு நீராடல் -பிராமணன் ஒருவன் தண்ணிக் குடத்தைத் தோள் மீது சுமந்துபோதல் - நீர் அருந்த ஆற்றண்டை மான் ஒன்று வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு அன்னப் பறவைகள் ஆற்றில் வீழ்ந்து நீராட் நிற்றல் - கீழ்ப்புறம் ஒரு சிறிய பெருமாள் கோவிலைச் சுற்றிலும் முனிவர்பலர் இருந்து தவம் செய்தல் - இவர்களைப் பார்த்துப் பூனை ஒன்று பின்னங் கால்கள் மீது நின்று முன்னங் கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் இருத்தல்-அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி அன்பு கொண்டு அதனைப் பணிதல்-ஆகிய இக்காட்சிகள் அனைத்தும் இமயமலை அடிவாரத்தில் கங்கைக் கரைக் காட்சிகளையே ஒத்துள்ளன. இச் செய்திகள் அனைத்தும் மகாபாரதம்உத்தியோக பருவத்துள் கூறப்பட்டுள்ளவையே ஆகும்.[1] இவற்றைச் செலுத்திய சிற்பிகளின் திறனை என்னென்பது பூனை தவம் செய்வதையும் காட்டி நகைச்சுவை ஊட்டும் அப் பேரறிஞர் கலை உணர்வே உணர்வு![2]

(3) மகா மல்லபுரம்: நரசிம்மவர்மன் கொண்ட பல பெயர்களுள் மகா மல்லன் என்பது சிறந்தது. அவன் மகாபலிபுரத்தைச் சிறந்த கடற்கரைப்பட்டினமாக்க முயன்றான்; மலைமீது கோட்டை ஒன்றை அமைக்க முயன்ற அடையாளம் காணப்படுகிறது. அவன் காலத்தில் மகாபலிபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது. எனவே, பல கட்டிடங்கள் அங்கு இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அந்நகரத்தைப் பெரிதாக்கிய இப் பேரரசன் அதற்குத் தன் பெயரை இட்டு ‘மகாமல்லபுரம்’ என்று வழங்கினான். ஆனால், நாளடைவில் அப் பெயர் மாறி ‘மகாபலிபுரம்’ என்று வழங்கலாயிற்று. இம் மகாமல்லபுரம், கரிகாற் சோழன், தொண்டைமான் இளந்திரையன்


  1. Heras’s “Studies in Pallavas History,’ pp.91, 92.
  2. இஃது அர்ச்சுனன் தவத்தையோ, கங்கைக் கரைக் காட்சியையோ குறிப்பதன்று; இது ‘சமணர் தொடர்புடைய ஒரு காட்சி’ என்பர். திரு. மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள்.