பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
129
நரசிம்மவர்மன்


ஏறத்தாழக் கி.பி. 575இல் கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டுப் பாண்டிய ஆட்சியை நிலைநிறுத்தினான். அப் பாண்டியர் பட்டியலைக் கானின், நரசிம்மவர்மன் காலத்துப் பாண்டியன், நாம் முன்சொன்ன நெடுமாறன் என்பது விளங்கும்.

பாண்டியர் பட்டியல்

1. கடுங்கோன் (கி.பி. 575-500)

2. மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625)

3. சேந்தன் - சயந்தவர்மன் (கி.பி.625-640)

4. அரிகேசரி மாறவர்மன் - பராங்குசன் (நின்ற சீர் நெடுமாற நாயனார்) (கி.பி. 640-680)

நெடுமாறன் தென்பாண்டி நாட்டில் தனக்கு அடங்காதிருந்த பரவரை வென்று அடக்கினான்: செழித்த குறுநாட்டை அழித்தான்; பிறகு பலமுறை சேரனை எதிர்த்துப் போரிட்டு இறுதியில் அவனைக் கைப்பிடியாகப் பிடித்தான். அவன் உற்றார் உறவினரையும் படைகளையும் சிறைப்பிடித்தான்; இங்ஙனம் தனது நாட்டை முதலில் பலப்படுத்திப் பிறகு மேற்கில் இருந்த சேரனை வென்று, பேரரசை நிலைநிறுத்தினான். இவன் காலத்திற்றான் பல்லவர் - பாண்டியர் போர் தொடக்கமானது.[1]


  1. K.A.N. Sastry’s “Pandyan Kingdom’, pp.51-53