பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரமேசுவரவர்மன்

133முன்னதைத் தோற்கடித்திருக்கலாம். தோற்ற படை கோட்டைக்குள் ஒளிந்துகொண்டது. உடனே சாளுக்கியர் படை அரிதின் முயன்று அகழியைக் கடந்தது ஏறமுடியாத மதில் மீது முயன்று வருந்தி ஏறியது; மதிலைத் துளைத்தது; இறுதியிற் காஞ்சியைக் கைப்பற்றியது... பரமேசுவரவர்மன் தப்பி ஒடிவிட்டான். அதனால் எதிர்ப்பவர் இன்றிச் சாளுக்கியன் தன் பெரும்படையுடன் பல்லவநாடு முழுவதும் கற்றுப்போக்குச்செய்து, இறுதியில் காவிரிக் கரையில் உறையூரில் வந்து தங்கினான். அவன் அப்பொழுதுதான் தான் அடைந்த வெற்றிக்கறிகுறியாகக் ‘கத்வல்’ பட்டயம் (25-4-674 இல்) வெளியிட்டான்.

“இதற்கு இடையில் பரமேவரவர்மன் ஆந்திர நாடு சென்று, பெரும்படை திரட்டித் தெற்கே வந்து, தன் வெற்றியில் வெறி கொண்டிருந்த சாளுக்கியனைத் திடீரென எதிர்த்தான்; போர் பெருவள நல்லூரில் கடுமையாக நடந்தது. (இப்போரின் கடுமையைக் கூரம் - பட்டயம் தெளிவாக விளக்குகிறது) போர் பல நாட்கள் நடந்தன. இறுதியில் பல்லவப்பேரரசன்வெற்றிபெற்றான். இருதிறத்தார்க்கும் கடுமையான இழப்பு (நட்டம்) உண்டானது. சாளுக்கிய மன்னன் புறங்காட்டிஓடி ஒளிந்தான்.”[1]

கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று “பரமேச்சுரன் வாதாபியை அழித்தான்’ எனக் கூறலால், ‘இவன் விக்கிரமாதித் தனைத் துரத்திச் சென்று, நரசிம்மனைப் போலவே சாளுக்கியர் தலைநகரையும் அழித்து மீண்டான்’ என்பதை அறியலாம்.[2]

போர் வருணனை

இப் போரைப்பற்றிக் கூரம்-பட்டயம் வருணித்தல் காண்க: “கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் நடந்து சென்றமையாற் கிளம்பிய துளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல


  1. Vide his “Studies in “Pallava History pp.44-47.
  2. C.S.Srinivasacharl’s “History and Institution of the Pallavas’ p.15.