பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

பல்லவர் வரலாறு


பேரரசனை வென்றமையாற்றான். நெடுமாறனுக்கு இரண்டு நூற்றாண்டுகட்குப்பின் இருந்தவரான சுந்தரர்,

‘நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற

நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”209[1]

என்று தமது திருத்தொண்டத் தொகையுட் கூறியுள்ளார். இதனால், நெடுமாறன் பெற்ற வெற்றிகள் அனைத்திலும் நெல்வேலியில் பொருது பெற்ற வெற்றியே பெருஞ் சிறப்புடையது என்ற கருத்துக் கி.பி.9ஆம் நூற்றாண்டு மக்களின்டப் பரவி இருந்தது என்பது நன்கு தெரிகிறது. ஆதலின், நெல்வேலிப் போர் எளிதானதன்று. அங்குப் பாண்டியனை எதிர்த்தவன் பெரு வேந்தனாக இருத்தல் வேண்டும்: போர்கடுமையாக நடந்திருத்தல் வேண்டும்; இறுதியில் நெடுமாறன் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல், பிற போர்களை விட்டு நெல்வேலிப் போரைச் சுந்தரர் போன்றார் குறித்திரார்.

இக் கருத்துகளுடன், வெங்கையா, பி.டி. சீனிவாச ஐயங்கார் போன்றோர் கூறும் சாளுக்கியர் பாண்டியர் போர், அவர்கள் கூறும் கோச்சடையன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளாமல் நெடுமாறன் காலத்தில் நடந்ததாகக் கொள்ளின், நெல்வேலிப் போர் நெடுமாறன் - விக்கிரமாதித்தன் போராகவே முடிதலைக் காணலாம். சிறிது பொறுமையும்நடுவுநிலைமையும்கொண்டுகேந்தூர்க்கல்வெட்டுக்’ 210[2]கூற்றையும் நோக்கி ஆராயின், இஃது உண்மை என்பது தோற்றும்.

ஈராஸ் பாதிரியார் கூறுமாறு, எதிர்ப்பவர் இன்றி உறையூர்வரை (பல்லவநாட்டின் தென் எல்லை முடிய) வந்த சாளுக்கிய மன்னன் வீணாக அங்குப் பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்தான் என


  1. 209. இவன் சிறந்த சிவனடியான் என்பதை, .....(1) ‘நறையாற்றகத்து வென்றான் முடிமேல் நின்றான் மணி கண்டம்போல்” (செ.256). (2) ‘விழிளுத்து வென்ற வல்லியல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார்சடையன் (செ279) எனப் பாண்டியக் கோவைப் பாக்களாலும் அறியலாம்.
  2. 210. Ep. Ind. Vol.Dx.p.205.