பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
137
பரமேசுவரவர்மன்


எண்ணுதலோ-தன்னைத் திடீரெனப் பல்லவன் பெருஞ்சேனை யுடன் தாக்க வரும்வரை உறையூரில் இன்பமாகப் பொழுது போக்கினன் என எண்ணுதலோ தவறாகும் அன்றோ? ஆராய்ச்சி உணர்வுடையார் இங்ஙனம் எண்ணார். மேலும், பரமேசுவரவர்மன் ஆந்திர நாடு சென்று பெருஞ்சேனை திரட்டிக்கொண்டு திடீரென வந்து தாக்கச் சிறிதுகாலம் ஆகி இருத்தல் வேண்டும். பேரரசனான பல்லவனை எதிர்த்து முறியடித்த பெருவேந்தன், அவனுக்கு அடுத்தபடி இருந்த பாண்டியனை எதிர்த்தல் இயல்பேயாம். இவற்றைஎல்லாம் நன்கு எண்ணின், இப்பொழுதுகுறித்துக் காட்டக் கடினமாகவுள்ள - பட்டயங்களில் கூறப்பெற்ற ‘நெல்வேலி’[1] என்னும் இடத்தில், வெற்றியில் ஆழ்ந்து கிடந்த விக்கிரமாதித் தனுக்கும் சிவபத்தியில் ஆழ்ந்து கிடந்த நெடுமாறனுக்கும் போர் நடந்தது; முடிவில் நெடுமாறன் வெற்றி பெற்றான் என்பவற்றை ஒருவாறு ஊகிக்கலாம்.

பெரியபுராணம் பாடியசேக்கிழார்பிற்காலச்சோழருள் ஒருவனான இரண்டாம் குலோத்துங்கன் அரசியல் உயர் அலுவலாளராவர். அவர் பல்லவர் பட்டயங்களை நன்றாகப் படித்து நூல் செய்தவர் என்பது-பூசலார் (இராசசிம்மன் காலத்து நாயனார்) புராணத்தாலும் கழற்சிங்க நாயனார் புராணத்தாலும் சிறுத்தொண்டர் புராணத்தாலும்[2] பிறவாற்றாலும்[3] சிறப்புறஉணரலாம். ஆகலின் சேக்கிழார்


  1. ‘நெல்வேலி’ என்பது புதுக்கோட்டைச் சீமையில் உள்ள நெல்வேலி என்னும் ஊராகம். ஆழ்வார்கள் காலநிலை. பக்.101. இவ்வூர் பாண்டிய நாட்டிற்கு வடக்கே பல்லவ நாட்டுத் தென் எல்லையில் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் சிறப்புப்பெற்ற இந்த இடத்தில் பாண்டியர் பலர் போரிட்டனர் என்பதைப் பாண்டியர் பட்டயங்கள் உணர்த்துகின்றன. ‘சோழ மண்டலத்தில் தென்கரைப்பனையூர் நாட்டைச் சேர்ந்த நெல்வேலி நாட்டு நெல்வேலி’ எனவரும் பட்டயத்தொடர் காண்க. 276 ணிஞூ 1916.
  2. சேக்கிழார் கல்வெட்டுகளையும் செப்புப் பட்டயங்களையும் நன்றாகப் படித்தறிந்தே வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மார் வரலாறு களைக் குறித்துள்ளார் என்பதை மெய்ப்பிக்க விரிவான நூல் ஒன்று பெரிய புராண ஆராய்ச்சி என்னும் பெயருடன் விரைவில் எம்மால் வெளியிடப் பெறும்.
  3. Dr. S.K.Aiyangars “Manimekalai in its Historical setting p.46. 214.