பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
142
பல்லவர் வரலாறு


இவற்றால், பரமேசுவரவர்மனுடைய வீரமும், சிவபக்தியும் நன்கு புலனாகும்; இவனுக்குச்சித்ரமாயன், குணபாசனன், அத்யந்தகாமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், ரணசயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்கள் இருந்தன என்பதும் விளங்குகிறது. தருமராசர் மண்டபம். கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுகளால் நன்கறியலாம்.

இவனுடைய கல்வெட்டுகளால், இப்பெரு வேந்தன் வடமொழியிற் சிறந்த புலமை உடையவனாக இருந்தான் என்பது பெறப்படும் (சிலேடைப் பொருளில் செய்யுள் செய்விக்கும் அறிவு புலமையறிவன்றோ?) கண்மணிகளைக் கொண்டு சிவலிங்க வடிவாக அமைக்கப்பட்ட முடியைத் தலையில் தரித்திருத்த இப் பேரரசனது சிவபக்தியை என்னென்பது!

இவன் காலத்து அரசர்

கங்க அரசர் பூவிக்கிரமன்: முதலாம் சிவமாறன், என்பவனும், சாளுக்கிய மன்னன் முதலாம் விக்கிரமாதித்தன் (கி.பி.655-680) என்பவனும் பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி. 540-680) என்பவனும் இவன்காலத்து அரசராவர்.


12. இராசசிம்மன்
(கி.பி. 666 - 705)

போர்கள்: முன்னுரை

இராசசிம்மன் காலத்தில் (கி.பி.685-705) எந்தப் போரும் நடத்திதில்லை என்றே வரலாற்று ஆசிரியர் அனைவரும் கொண்டனர். ஆயின், இவனுடைய கல்வெட்டுகளை ஊன்றிப் படிப்பின், அங்ஙனமே இவன் காலத்துச் சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கி.பி.680-696) தொடர்பான பட்டயங்களை ஊன்றி