பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

143



ஆராயின் - இக்காலத்திற் பல்லவர் - சாளுக்கியர் போர் நடந்தது என்பதை உறுதியாக நம்பலாம்.

சாளுக்கியர் பட்டயங்கள்

(1) சோரப் பட்டயம் : ‘சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்.[1]

(2) வக்கலேப் பட்டயம்: விநயாதித்தன் திரையரச பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்; கவேர அரசர் (சோழர்?) பாரசீக (பாண்டியர்?), சிம்மளர் முதுலியோரிடம் கப்பம் வாங்கினான் (?)[2]

இவற்றை நன்கு ஆராய்ந்தால் விநயாதித்தன், தன் தந்தை கட்டளை (விருப்பப)ப்படி, தெற்கே இருந்த பல்லவ, சோழ, பாண்டிய, சேரநாடுகளை அடக்கிக் களப்பிரர், ஹெய்ஹயர், மாளவர் என்பவர் வன்மையைக் குறைத்து, எங்கும் அமைதியுண்டாகப் படையெடுத்தான் என்பது புலனாகிறது.[3]

பல்லவர் கல்வெட்டுகள்

இராசசிம்மன் கல்வெட்டுகளில் இவன், சிறந்த மற்போர் வீரன், யானை நூல் அறிவில் வத்சராசனையும் பகதத்தனையும் ஒத்தவன்; போரில் விசயனுக்கும் இராமனுக்கும் ஒப்பானவன் உடல் வலியாலும் புகழாலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன்; நாடு பிடிப்பதில் பேரவாவுடையவன்; போரில் மிகக் கொடியவன்; தன் பகைவரை அழிப்பவன்; இவனது செல்வாக்கு உயர்கின்றது: அஞ்சத்தக்க பேராண்மை உடையவன்; அடக்கத்தினாலே வெல்லத்தக்கவன், போரிற் சிங்கம் போன்றவன்; வில்லையே துணையாகக் கொண்டவன்; பகைவர்க்குஇடியேறு போன்றவன்; கொடிய பேரரசுகளை ஒழிப்பவன்; போர்வீரரை அழிப்பவன்; போரில் மனவுறுதி உடையவன்; போரில் செல்வத்தை வெல்லுபவன்


  1. Int.Ant, Vol.XIX. pp.151-152
  2. Ep.Ind. Vol. IX.p.200.
  3. Ind Ant. Vol. VI pp.87-88.